Ind vs Nz Latest News: இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த ஜனவரி 11ஆம் தேதி தொடங்கியது. இதுவரை இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையி, அதில் முதல் போட்டியில் இந்திய் அணியும் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வென்றது. முதல் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி இரண்டாவது போட்டியில் அதனை தவறவிட்டது.
Add Zee News as a Preferred Source
Team India: இந்திய அணி மோசமான பந்து வீச்சு
இந்திய அணி வைத்த 285 ரன்கள் டார்க்கெட்டை நியூசிலாந்து அணி 47 ஓவர்களில் அடித்து வெற்றிபெற்றது. இதற்கு இந்திய அணியின் மோசமான பந்து வீச்சே காரணம். குறிப்பாக சிராஜ் ஒரு விக்கெட்டை கூட எடுக்காதது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. அதேபோல் மிடில் ஓவர்களில் பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட்டை கூட எடுக்காதது நியூசிலாந்து அணிக்கு ஏதுவாக அமைந்தது.
Arshdeep Singh: அர்ஷ்தீப் சிங்கை எடுக்காதது ஏன்?
இதனால் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் விமர்சித்து வருகின்றனர். அதாவது வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை வெளியே அமர வைத்துவிட்டு வேலைக்கு ஆகாத பந்து வீச்சாளர்களை பிளேயிங் 11ல் வைத்திருப்பது எந்த வகையில் சரி என்றும் அவர் அர்ஷ்தீப் சிங்கை எடுக்கும் வரை வெற்றி பெற மாட்டார் என்றும் சாடி வருகின்றனர்.
Arshdeep Singh Record: 100 விக்கெட்கள் வீழ்த்திய முதல் இந்தியர்
அர்ஷ்தீப் சிங் டி20 கிரிக்கெட்டில் முதல் இந்தியராக 100 விக்கெட்கள் எடுத்து அசத்தியவர். கடந்த டி20 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். அதேசமயம் ஒருநாள் போட்டிகளில் விளையாடியபோதெல்லாம் சிறப்பாக பங்களிப்பை கொடுத்தவர். இப்படி இந்திய அணியின் இரண்டு ஃபார்மெட்டிலும் அசத்தியவருக்கு வாய்ப்பினை கொடுக்காமல் ஒரு சில போட்டிகளில் மட்டும் அசத்தும் ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பளித்து வருகிறார் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்.
Gautam Gambhir: கம்பீர் செய்த மிகப்பெரிய தவறு
இந்த நிலையில், கவுதம் கம்பீரின் இந்த நடவடிக்கையை முன்னாள் வீரர் முகமது கைஃப் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், அர்ஷ்தீப் சிங் போன்ற வீரரை வெளியே வைத்துவிட்டு ரன்களை வாரி வழங்கும் பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பை வழங்குகிறார். ஒருநாள் போட்டியில் 280 ரன்கள் என்பது குறைவானது கிடையாது. பந்து வீச்சாளர்களால் இந்த ரன்களை வைத்துக்கொண்டு எதிரணியை கட்டுப்படுத்த முடியும். இதனை கட்டுப்படுத்தாத இந்திய அணி எப்படி உலகக் கோப்பையை வெல்லும். இலக்கு குறைவாக இருக்கும் போட்டிகளில் பந்து வீச்சை வைத்து வெற்றி பெற கற்றுக்கொள்ள வேண்டும் என முகமது கைஃப் விமர்சித்தார்.
IND vs NZ 3rd ODI: நாளை கடைசி ஒருநாள் போட்டி
இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கு தயாராகி வருகிறது. இப்போட்டி நாளை (ஜனவரி 18) இந்தூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணியே தொடரை கைப்பற்றும். இதனால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
India Squad For NZ ODI Series: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி
சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்)*, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், துருவ் ஜுரேல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
About the Author
R Balaji