சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான மறைந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி, அதிமுகவினர் கொண்டாடி மகிழும் நிலையில், பிரதமர் மோடி, முன்னாள் அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தவெக தலைவர் விஜய் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். எம்.ஜி.ஆரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம் என பிரதமர் மோடியும், தீய சக்தியின் ஆட்சியில் இருள் சூழ்ந்த தமிழகத்தை மீட்டெடுத்த எம்.ஜி.ஆரை போற்றுவோம் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். […]