சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் 10 பேர் கொண்ட தேர்தல் பிரசார குழுவை அமைத்துள்ளார். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள 10 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, கழகத் தோழர்களுக்கு வணக்கம். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட, தொகுதி […]