Amazon Great Republic Day Sale 2026: அமேசானின் கிரேட் குடியரசு தின விற்பனை 2026 (Amazon Great Republic Day Sale) நேற்று முதல் பிரைம் உறுப்பினர்களுக்கு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது இன்று முதல் அனைத்து பயனர்களுக்கு இந்த விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டுக் கொண்டிருந்தால், இந்த விற்பனையை விட சிறந்த சலுகை எங்கும் கிடைக்காது. இந்த மெகா விற்பனை நேற்று முதல் தொடங்கிய நிலையில், பல ஸ்மார்ட்போன்களில் அபார தள்ளுபடிகளும், சலுகைகளும் வழங்கபத்துள்ளது. அதுமட்டுமின்றி அமேசானின் இந்த விற்பனை தொடங்கப் பட்ட இந்த நேரத்தில் பிளிப்கார்ட் நிறுவனமும் அதன் குடியரசு தின விற்பனையை பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.
Add Zee News as a Preferred Source
அமேசான் ஏற்கனவே பல ஸ்மார்ட்போன்களின் உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் எதிர்பார்க்கப்படும் விலைகளை வெளியிட்டுள்ளது, இதனால் வாங்குபவர்கள் தங்கள் விருப்பங்களை முன்கூட்டியே பட்டியலிட்டுக் கொள்ளலாம். இதன் முழு விவரங்களையும் கீழ் கண்ட கட்டுரையில் பார்ப்போம்…
அமேசானின் குடியரசு தின விற்பனை (Amazon Great Republic Day Sale) ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கம்
அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை (Amazon Great Republic Day Sale 2026) 2026 ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி உள்ளாரகு. பிரைம் உறுப்பினர்கள் முதல் நாளில் பிரத்யேக ஆரம்ப அணுகலைப் பெற்றனர்.
HDFC வங்கி கிரெடிட் கார்டுகளில் 10% வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படும்.
கட்டணமில்லாத EMI மற்றும் கேஷ்பேக் சலுகைகளும் கிடைக்கக்கூடும்.
இந்த அனைத்து நன்மைகளுடனும், விலையுயர்ந்த முதன்மை தொலைபேசிகளும் மிகவும் மலிவு விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
பட்ஜெட் பிரிவில் பெரிய தள்ளுபடிகள்
இந்த முறை, பழைய ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்ல, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களும் விற்பனையின் ஒரு பகுதியாக இருக்கிறது. குறிப்பாக ஆப்பிள், சாம்சங், ஒன்பிளஸ் மற்றும் ஐக்யூஓ (Apple, Samsung, OnePlus and iQOO) போன்ற முக்கிய பிராண்டுகளில் அமேசான் மிகப்பெரிய தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன் சலுகைகள்
Apple iPhone 17 Pro – ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ
வெளியீட்டு விலை: ₹1,34,900
விற்பனை விலை: கிட்டத்தட்ட ₹1,25,400
Samsung Galaxy S25 Ultra – சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா
வெளியீட்டு விலை: ₹1,29,999
விற்பனை விலை: கிட்டத்தட்ட ₹1,04,999
OnePlus 15 – ஒன்பிளஸ் 15
விற்பனை விலை: ₹68,999
OnePlus 15R – ஒன்பிளஸ் 15ஆர்
விற்பனை விலை: ₹44,999
முதல் நாளிலேயே வாங்குவது மதிப்புள்ளதா?
கடந்த சில வருடங்களாக நிலவும் போக்கைப் பார்த்தால், ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் ஸ்டாக்குகள் மிக விரைவாக தீர்ந்து போகின்றன. சில நேரங்களில் சிறந்த டீல்கள் முதல் நாளில் மட்டுமே கிடைக்கும். விற்பனையின் போது ஏமாற்றத்தைத் தவிர்க்க உங்கள் தொலைபேசியை முன்கூட்டியே உங்கள் விருப்பப்பட்டியலில் சேர்ப்பது நல்லது. உங்கள் வங்கி அட்டை மற்றும் EMI விருப்பங்களை முன்கூட்டியே தயாராக வைத்திருங்கள். இதன் மூலம் குறைந்த விலையில் இந்த விற்பனையில் உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க முடியும்.
About the Author
Vijaya Lakshmi