ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி விளையாடும் போட்டிகள் பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடத்த கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு ஆர்சிபி ரசிகர்களை மட்டும் இல்லாமல், விராட் கோலி ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. டி20 உலக கோப்பை முடிந்ததும் ஐபிஎல் 2026 தொடர் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. கடந்த மாதம் ஐபிஎல் மினி ஏலம் நடைபெற்ற நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தங்களது அணியை மேலும் வலுப்படுத்தி உள்ளது.
Add Zee News as a Preferred Source
Home Department, Government of Karnataka, has granted permission to the Karnataka State Cricket Association (KSCA) to host international and IPL matches at the iconic M. Chinnaswamy Stadium, Bengaluru. The permission is subject to compliance with specific terms and conditions… pic.twitter.com/KCWJ4vttVl
— ANI (@ANI) January 17, 2026
பெங்களூரு
சென்னை மற்றும் மும்பை அணிகளை தாண்டி பெங்களூர் அணிக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவர்களது நீண்ட நாள் கனமான ஆர்சிபி அணியின் முதல் கோப்பையை கடந்த ஆண்டு அந்த அணி வெற்றி பெற்றது. ஆனால் கோப்பையின் வெற்றி பேரணியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதனால் இனி சின்னச்சாமி மைதானத்தில் போட்டிகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டது.
கர்நாடக அரசு முடிவு
பெங்களூர் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலை தொடர்ந்தும், பெங்களூரில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடுகள் காரணமாகவும் சின்னசாமி மைதானத்தில் இனி போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்த ஆண்டு ஆர்சிபி அணி தங்களது ஹோம் போட்டிகளை வேறு மைதானங்களில் விளையாடும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ஆர்சிபி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் ஐபிஎல் நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த கர்நாடகா அரசு அனுமதி வழங்கி உள்ளது.
விராட் கோலியின் வருகை
ஆர்சிபி என்றால் கிங் கோலி தான். ஆர்சிபி அணிக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்க முக்கிய காரணம் விராட் கோலி தான். பெங்களூரில் விராட் கோலி விளையாடும் போதெல்லாம் மைதானமே அதிரும் அளவிற்கு சத்தம் இருக்கும். இந்த ஆண்டு சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடைபெறாது என்று செய்திகள் வெளியானதால் விராட் கோலி ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்/ ஆனால் தற்போது கர்நாடக அரசு அளித்துள்ள ஒப்புதலுக்கு பிறகு மீண்டும் விராட் கோலியை சின்னச்சாமி மைதானத்தில் பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
மற்ற மைதானங்களை தாண்டி பெங்களூர் சின்னசாமி மைதானம் அளவில் சிறிதாக இருக்கும். இதனால் அங்கு சிக்ஸர் மழை பொழியும். இதனால் இங்கு நடைபெறும் போட்டிகள் எப்போதுமே சுவாரசியமாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே ஆர்சிபி அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டும் சரியான விதத்தில் இருப்பதால் இந்த ஆண்டும் கோப்பையை வெல்ல ஆர்சிபி அணி தயாராகி வருகிறது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடைபெறுவது அவர்களது ரசிகர்களை தாண்டி அந்த நகரின் பொருளாதாரத்திற்கும் கூடுதல் நல்லதாகும். போட்டிகளை காண வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் வருவார்கள். இதனால் ஹோட்டல்கள், உணவகங்கள், டாக்ஸிகள் என அனைவருக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு ஐபிஎல் சீசனுக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது.
About the Author
RK Spark