சென்னை: அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை பறித்துவிட்டு தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார் எடப்பாடி பழனிச்சமி என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கடுமையாக சாடியுள்ளார். 2003-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே நிர்மூலமாக்கிய அதிமுக இப்போது ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது? அரசு ஊழியர்களை கொச்சைப்படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பழனிசாமி ஏன் பதறுகிறார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி எழுப்பியுள்ளார். […]