இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி வருகிறது. நேற்று (ஜனவரி 18) ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், இந்தியா அத்தொடரை இழந்துள்ளது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இத்தொடரை முடித்த கையோடு இந்திய அணி டி20 உலகக் கோப்பைக்கு செல்கிறது. அதற்கு முன்பாக நியூசிலாந்து டி20 தொடரை ஒரு பயிற்சியாக எதிர்கொள்ள இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
காயமடைந்த 2 முக்கிய வீரர்கள்
இந்த சூழலில், டி20 உலகக் கோப்பையில் முக்கிய வீரராக திகழும் வாஷிங்டன் சுந்தருக்கு நடந்து முடிந்த ஒருநாள் தொடரின்போது காயம் ஏற்பட்டது. இதனால் அவர் நியூசிலாந்து தொடரில் இருந்து விலகி உள்ளார். அதேபோல் மற்றொரு முக்கிய வீரர் திலக் வர்மாவும் தற்போது காயத்தால் அவதிபட்டு வருகிறார். அவரும் நியூசிலாந்து தொடருக்கு எதிரான 5 போட்டிகளில் மூன்றில் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ உறுதி செய்துள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் விளையாடுவாரா மாட்டாரா என்பதை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறி உள்ளது.
டி20 உலகக் கோப்பையில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக யார்?
நியூசிலாந்து தொடரில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ரவி பிஷ்னோய் மற்றும் திலக் வர்மாவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரையும் அறிவித்துள்ளனர். இருவரும் இன்னும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலக வில்லை என்றாலும் அவர்கள் அத்தொடருக்கு தயாராகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்களா? அவர்கள் முதலில் அத்தொடரில் விளையாடுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் ஒருவேளை டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகினால் அவரது இடத்திற்கு 5 வீரர்கள் போட்டியிட்டு வருகின்றனர். அவர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
க்ருணால் பாண்டியா (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
டி20 உலகக் கோப்பையில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக பயன்படுத்தும் வீரர்களின் பரிந்துரையில் க்ருணால் பாண்டியா உள்ளார். ஏனென்றால் கடந்த ஐபிஎல் சீசனில் க்ருணால் பாண்டியா பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சிறப்பாக செயலபட்டார்.
ரியான் பராக் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
வாஷ்ங்டன் சுந்தருக்கு மாற்றாக ரியான் பராக்கை டி20 உலகக் கோப்பையில் கொண்டு வர வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. ரியான் பராக்கை அணிக்குள் கொண்டு வரும் பட்சத்தில் இந்திய அணியின் பேட்டிங் மேலும் வலுவடையும். அதேசமயம் அவரால் பந்து வீசவும் கூடும் என்பதால் அவருக்கு முன்னுரிமை கொடுக்க வாய்ப்புள்ளது.
ரவி பிஷ்னோய் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக டி20 உலகக் கோப்பையில் ரவி பிஷ்னோய் விளையாட அதிக வாய்ப்புள்ளது. அவரை தற்போது நியூசிலாந்து டி20 தொடருக்கு வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக இந்திய அணி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சபாஷ் அகமது (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்)
வாஷிங்டன் சுந்தருக்கு மாற்று வீரருக்கான பரிந்துரையில் சபாஷ் அகமதும் உள்ளார். சபாஷ் அகமதால் மிடில் ஆர்டரில் இறங்கி ரன்களையும் அடிக்க முடியும் பந்து வீச்சில் விக்கெட்களையும் எடுக்க முடியும் என்பதால் அவரை ஒரு ஆப்ஷ்னாக இந்திய அணி நிர்வாகம் வைத்திருக்கிறது.
ஆயூஷ் பதோனி (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்)
ஒருநாள் தொடரில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆயூஷ் பதோனியைதான் கொண்டு வந்தனர். அதனால் டி20 உலகக் கோப்பையிலும் இவரை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
About the Author
R Balaji