இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று தொடங்குகிறது. கடந்த வாரம் நடந்து முடிந்த ஒரு நாள் தொடரில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் அதற்கு பழி தீர்க்கும் விதமாக இந்த டி20 தொடரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்குகிறது. இந்திய அணியில் காயம் காரணமாக திலக் வர்மா முதல் மூன்று போட்டிகளில் இருந்து விலகி உள்ளார். இந்நிலையில் அவருக்கு பதிலாக யார் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. முதல் மூன்று போட்டிகளுக்கு மட்டும் ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டார். மூன்றாவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவாரா அல்லது இஷான் கிஷன் களமிறங்குவாரா என்ற கேள்விக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதிலளித்துள்ளார்.
Add Zee News as a Preferred Source

ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு இல்லை
திலக் வர்மாவிற்கு பதில் மூன்றாவது இடத்தில் விஷால் இஷான் கிஷன் களமிறங்குவார் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் உறுதியளித்துள்ளார். இந்தியா உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள திலக் வர்மாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக 5 போட்டிகள் கொண்ட நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதல் மூன்று போட்டியில் இருந்து மட்டும் விலகி உள்ளார். பிசிசிஐயின் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவர் நான்காவது மற்றும் ஐந்தாவது டி20 போட்டிகளில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இஷான் கிஷன் தான் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இஷான் கிஷன் ஏன்?
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்து வந்த இஷான் கிஷன் சமீபத்திய உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடினார். மேலும் கேப்டனாக இருந்து தனது அணியையும் வெற்றி பெற செய்தார். இதன் காரணமாக இந்திய உலக கோப்பை அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சனா அல்லது இஷான் கிஷன்? இருவரில் யார் விளையாடுவார்கள் என்ற கேள்வி இருந்து வந்த நிலையில், இஷான் கிஷனை மூன்றாவது இடத்தில் விளையாட வைக்க உள்ளனர் என்ற பதில் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இருந்தாலும் அவர் முதல் மூன்று போட்டிகளுக்கு மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இஷான் கிஷன் உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளதால், அவரின் பார்ம் குறித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளனர். இதன் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட வைக்கப்படவில்லை.

சூர்யகுமார் யாதவ் பேட்டி
செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷனுக்கு ஏன் முன்னுரிமை அளிக்கிறோம் என்பதை தெளிவுபடுத்தினார். இஷான் கிஷன் டி20 உலக கோப்பை அணியில் கூடுதல் விக்கெட் கீப்பராக இடம் பெற்றுள்ளார். எனவே அவருக்கு போதிய பயிற்சி அளிப்பது அவசியம். திலக் வர்மாவை போலவே இஷான் கிஷனும் ஒரு இடது கை பேட்ஸ்மேன். இருவரும் ஒரே பாணியில் விளையாடுவார்கள். அது அணிக்கு சமநிலையை ஏற்படுத்தும். இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரின் கடின உழைப்பிற்கு வெகுமதி கிடைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தனது ஃபார்ம் குறித்து பேசிய சூர்யா, நான் நம்பர் மூன்று மற்றும் நம்பர் நான் என இரண்டு இடங்களிலும் ஆடி வருகிறேன்.
அந்த இடங்களில் நான் நன்றாகவும் பேட்டிங் செய்து உள்ளேன். தேவைப்பட்டால் நான் மூன்றாவது இடத்திலும், இஷான் கிஷன் நான்காவது இடத்திலும் களம் இறங்குவார்கள். என் பேட்டில் இருந்து ரன்கள் வரவில்லை என்பது உண்மைதான். ஆனால் என் அடையாளத்தை என்னால் மாற்ற முடியாது. சாதனை வந்தால் ஏற்றுக்கொள்வேன், இல்லையென்றால் திரும்பிச் செல்வேன். எனது முதல் பொறுப்பு அணி நன்றாக விளையாட வேண்டும் என்பது தான் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய டி20 அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ரின்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சகரவர்த்தி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவி பிஷ்னோய்.
About the Author
RK Spark