இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இழந்த நிலையில், தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகிறது. இத்தொடர் நேற்று (ஜனவரி 21) தொடங்கியது. நேற்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்று 1-0 என்ற கணக்கில் வெற்றியுடன் தொடரை தொடங்கி உள்ளது.
Add Zee News as a Preferred Source
Abhishek Sharma: அபிஷேக் சர்மா அசத்தல் பேட்டிங் – நியூசிலாந்துக்கு 239 ரன்கள் இலக்கு
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி 238 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 84 ரன்களும் ரிங்கு சிங் 44 ரன்களையும் அடித்தனர். நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டஃபி மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
IND vs NZ: 48 ரன்கள் வித்தியாச்த்தில் இந்திய அணி வெற்றி
இதையடுத்து 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் க்ளென் பிலிப்ஸ் 78 ரன்கள், மார்க் சாப்மேன் 39 ரன்கள் அதிகபட்சமாக எடுத்திருந்தனர். இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி மற்றும் சிவம் துபே தலா 3 விக்கெட்கள் எடுத்திருந்தனர். இதனால் 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை இந்திய அணி பெற்றது.
India vs New Zealand 2nd t20: நாளை இரண்டாவது டி20 போட்டி
இந்த நிலையில், நாளை (ஜனவரி 23) இரு அணிகளுக்கு இடையே 2வது டி20. போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டி ராய்ப்பூர், ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் மாலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த சூழலில், நாளை நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11ல் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Shreyas Iyer: ஷ்ரேயாஸ் ஐயரை பிளேயிங் 11ல் எடுக்க வாய்ப்புள்ளது
நாளை போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11ல் பொரும்பாலும் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. முதல் போட்டியில் இருந்த வீரர்களே 2வது போட்டியிலும் தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் இஷான் கிஷன் 8 ரன்கள் மட்டுமே எடுத்ததால் அவருக்கு பதிலாக வேண்டுமானால் ஷ்ரேயாஸ் ஐயரை கொண்டு வர வாய்ப்புள்ளது. இருப்பினும் இஷான் கிஷனுக்கு ஒரு வாய்ப்பும் வழங்கலாம். மற்றபடி, எந்த மாற்றமும் நடக்க வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.
India Predicted XI For 2nd T20: இரண்டாவது டி20க்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் 11
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் அல்லது ஷ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், சிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
About the Author
R Balaji