சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா உள்பட கடற்கரை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 26-ம் தேதி மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை எதிரே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்ற உள்ளார். இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதை முன்னிட்டு மெரினா மற்றும் அதைச் சுற்றி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. […]