சென்னை: தமிழ்நாட்டில் சோலார் மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் “வீட்டுக்கொரு சோலார்“ திட்ட பரப்புரை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பரப்புரையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார். சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் மேற்கூரை சூரியமின் உற்பத்தியினை ஊக்குவிக்கும் வகையில் “வீட்டுக்கொரு சோலார்“ திட்டபரப்புரை துவக்கம் மற்றும்“ புதிய மேற்கூரை சோலார் வழிகாட்டி மென்பொருள் கருவி – (Rooftop solar Explorer) RTSE – பயன்பாடு ஆகியவற்றை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்தியாவில் […]