Budget 2026: நாடு முழுவதும் 2026-27 ஆண்டிக்கான பட்ஜெட்டிற்காக ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமயில் பிப்ரவரி 1, 2026 அன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட்டில் வரி மற்றும் அரசு திட்டங்களை மட்டுமல்லாமல், சாதாரண மக்களின் அன்றாடத் தேவைகள் தொடர்பான கேள்விகளுக்கான பதில்களையும் பெறப்படும். இவற்றில் மிக முக்கியமான கேள்வி, 2026 பட்ஜெட்டுக்குப் பிறகு மொபைல் போன்கள், லேப்டாப்கள் மற்றும் தொலைக்காட்சிகள் போன்ற மின்னணு பொருட்களின் விலை மலிவாகுமா அல்லது விலை உயருமா என்பதுதான்.
Add Zee News as a Preferred Source
ஸ்மார்ட்போன்களின் விலை உயருமா அல்லது மலிவாகுமா?
கடந்த சில மாதங்களாக ஸ்மார்ட்போன் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. இதற்கு மிகப்பெரிய காரணம் செயற்கை நுண்ணறிவுக்கான (AI) அதிகரித்து வரும் தேவை என்று நம்பப்படுகிறது. தற்போது வெளியிடப்படும் ஸ்மார்ட்போன்கள் அழைப்பு மற்றும் கேமராக்களை தாண்டி AI அம்சங்களுக்கு அதிக சக்திவாய்ந்த செயலிகள் மற்றும் பெரிய மெமரி சிப்கள் போன்ற அம்சங்களும் அடங்கும்.
முன்னதாக மெமரி சிப் இருந்த நிலையில் இப்போது AI, தரவு மையங்களிலும் உயர் செயல்திறன் கொண்ட கணினியிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, உலக சந்தையில் மெமரி சிப்களுக்கு மவுசு குறைந்துள்ளது. குறைந்த விநியோகம் மற்றும் அதிக தேவை காரணமாக, விலைகள் வேகமாக அதிகரித்தன, இது ஸ்மார்ட்போன்களின் விலைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது.
பட்ஜெட்டிலிருந்து எதிர்பார்ப்புகள் என்ன?
Ai+ ஸ்மார்ட்போன்களின் தலைமை நிர்வாக அதிகாரியும், Nxtquantum Shift Technologies இன் நிறுவனருமான மாதவ் சேத், இந்தியாவின் நுகர்வோர் தொழில்நுட்பத் துறை ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது என்று நம்புகிறார். அவரைப் பொறுத்தவரை, இந்தியா வெறும் அசெம்பிளி வரை நின்றுவிடக் கூடாது.
“கேமரா மாட்யூல், பேட்டரிகள், PCBகள், எனக்ளோஜர், சார்ஜர் போன்ற முக்கிய கூறுகளின் உற்பத்தியை பட்ஜெட் ஊக்குவித்தால், நீண்ட காலத்திற்கு விலைகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறுகிறார். கூடுதலாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கணினி வடிவமைப்பு மற்றும் மென்பொருள் கண்டுபிடிப்பு தொடர்பான ஐபிக்கும் வலுவான ஆதரவு தேவை.
தொலைபேசியை அசெம்பிளி செய்வது விலையில் பாதிப்பை ஏற்படுத்துமா?
இன்று, பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்தியாவில் அசெம்பிளி நோக்கங்களுக்காக செயல்படுகின்றன. சிப்ஸ் மற்றும் பிற முக்கிய கூறுகளுக்கு சீனா உள்ளிட்ட பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலை தொடர்கிறது. இந்தியாவில் கன்போனெண்ட் மேன்யுஃபேக்சரிங் அதிகரிக்காவிட்டால், நிலையான விலைக் குறைப்புகளை அடைவது கடினம் என்று தொழில்துறை நம்புகிறது.
Indkal டெக்னாலஜியின் தலைமை நிர்வாக அதிகாரி ஆனந்த் துபே கூறுகையில், நுகர்வோர் மின்னணுத் துறை தற்போது இந்தியப் பொருளாதாரத்தின் வலுவான தூணாக மாறியுள்ளது. இந்தத் துறை கோடிக் கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியாவின் காலடியை வலுப்படுத்துகிறது. இதுவரை எட்டப்பட்ட வேகத்தை மேலும் துரிதப்படுத்தக்கூடிய ஒரு கொள்கையை அரசாங்கம் கொண்டு வரும் என்று பட்ஜெட்டில் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் மாதங்களில் விலைகள் எவ்வளவு அதிகரிக்கக்கூடும்?
அடுத்த இரண்டு மாதங்களில் மின்னணு சாதனங்களின் விலைகள் மேலும் 4 முதல் 8 சதவீதம் வரை உயரக்கூடும் என்று தொழில்துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டும், பல பொருட்களின் விலை 21 சதவீதம் வரை உயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன் பிராண்டுகள் விலைகளை எவ்வாறு அதிகரித்துள்ளன
சில ஸ்மார்ட்போன் பிராண்டுகள் ஏற்கனவே ஜனவரி மாதத்தில் விலைகளை உயர்த்தியுள்ளன. Vivo மற்றும் Nothing போன்ற பிராண்டுகள்ரூ. 3,000 முதல் ரூ. 5,000 வரை விலைகளை அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், Samsung போன்ற பிராண்டுகள் நேரடியாக விலைகளை அதிகரிப்பதற்கு பதிலாக கேஷ்பேக் மற்றும் தள்ளுபடிகளைக் குறைத்துள்ளன.
About the Author
Vijaya Lakshmi