சொந்த ஊரில் சஞ்சு விளையாட மாட்டாரா…? உள்ளே வரும் இஷான் கிஷன் – பேட்டிங் கோச் தகவல்!

India vs New Zealand 5th T20I: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20ஐ போட்டி திருவனந்தபுரம் நகரில் நாளை (ஜன. 31) மாலை 7 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் நேரலையில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

IND vs NZ: தொடரை வென்ற இந்தியா

மொத்தம் 5 போட்டிகள் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா ஏற்கெனவே தொடரை வென்றுவிட்டது. இந்திய அணி முதல் மூன்று போட்டிகளில் வென்றிருந்தது, அப்போது இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் நம்பர் 8 வரை பேட்டர்கள் இருந்தார்கள். ஆனால், விசாகப்பட்டினத்தில் நடந்த நான்காவது டி20ஐ போட்டியில் இந்திய அணி ஹர்ஷித் ராணா உடன் சேர்த்து வெறும் 7 பேட்டர்களுடன் மட்டுமே களமிறங்கியது. மேலும், இந்த போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

IND vs NZ: இந்திய அணி செய்த மாற்றங்கள்

இந்திய அணி முதல் டி20ஐ போட்டியில் மூன்று ஆல்ரவுண்டர்கள், இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள், ஒரு பிரீமியம் ஸ்பின்னருடன் களமிறங்கியது. அக்சர் பட்டேல் காயத்தில் சிக்கிய உடன் இரண்டாவது டி20ஐ போட்டியில் பும்ராவுக்கும் ஓய்வு கொடுத்து இந்திய அணி இரண்டு பிரீமியம் ஸ்பின்னர்கள், இரண்டு ஆல்-ரவுண்டர்கள், ஒரு பிரீமியம் வேகப்பந்துவீச்சாளருடன் களமிறங்கியது. ஹர்ஷித் ராணாவும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். இதனால் இந்தியாவுக்கு நான்கு பிரீமியம் பந்துவீச்சாளர்களும் கிடைத்தார்கள் நம்பர் 8 வரை பேட்டர்களும் இருந்தனர். 

அடுத்து, மூன்றாவது டி20ஐ போட்டியில் இதே காம்பினேஷனில்தான் விளையாடியது. ஆனால் வீரர்கள் மாறினர், அர்ஷ்தீப் இடத்தில் பும்ராவும், வருண் சக்ரவர்த்தி இடத்தில் ரவி பிஷ்னோயும் விளையாடினார்கள். கடந்த நான்காவது டி20ஐ போட்டியில் சிறு காயம் காரணமாக இஷான் கிஷன் இடம்பெறவில்லை. இஷான் கிஷனுக்கு பதிலாக அர்ஷ்தீப் மீண்டும் அணிக்குள் வந்தார். இதனால், இந்தியாவுக்கு ஹர்ஷித் ராணாவை சேர்த்து நம்பர் 7 வரைதான் பேட்டர்கள் இருந்தார்கள். அர்ஷ்தீப், பும்ரா, ரவி பிஷ்னோய், குல்தீப் என நான்கு பிரீமியம் பந்துவீச்சாளர்கள் விளையாடினர். ஒரு பேட்டர் குறைந்ததால் இந்திய அணியால் அந்த போட்டியை வெல்ல முடியவில்லை. 

IND vs NZ: 5வது போட்டியில் மாற்றம் இருக்குமா?

இந்தச் சூழலில், வரும் 5வது டி20ஐ போட்டியில் இந்திய அணியில் மீண்டும் இஷான் கிஷன் ஆகியோர் சேர்க்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. சஞ்சு சாம்சன் இடத்தில் இஷான் கிஷன் விளையாடலாம் என தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, ரவி பிஷ்னோய்க்கு பதில் அக்சர் பட்டேல் சேர்க்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. இதனால், நம்பர் 8 வரை பேட்டிங்கும் இருக்கும், பந்துவீச்சுக்கும் சரியான காம்பினேஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

IND vs NZ: சஞ்சு சாம்சன் விளையாடுவாரா?

இந்நிலையில், 5வது டி20ஐ போட்டியை முன்னிட்டு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோடக் இன்று நடந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சஞ்சு சாம்சன் நீக்கப்படுகிறாரா என்ற கேள்விக்கு, “எல்லோரும் எதிர்பார்த்தது போல் அவர் அதிக ரன்கள் எடுக்கவில்லை. ஆனால் அது கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு பகுதி. சில நேரங்களில், தொடர்ச்சியாக ஐந்து இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் எடுப்பீர்கள், சில சமயங்களில் கொஞ்சம் கடினமான காலகட்டம் இருக்கும். எனவே ஒருவர் மனரீதியாக எப்படி வலுவாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் முக்கியம். மேலும், அவரை நல்ல மனநிலையில் வைத்திருப்பதுதான் எங்களது வேலை என்பது தெளிவாகிறது. அவர் பயிற்சியில் ஈடுபடுகிறார், கடினமாக உழைக்கிறார். சஞ்சுவின் திறமை என்னவென்று நம் அனைவருக்குமே தெரியும்” என பதில் அளித்தார். 

IND vs NZ: இஷான் கிஷன் விளையாடுவார்…?

இதன்மூலம், சஞ்சு சாம்சன் நாளைய போட்டியில் விளையாடுவார் என்பதும் ஏறத்தாழ உறுதியாகிறது. அதேபோல், இஷான் கிஷன் விளையாடுவாரா என்ற கேள்விக்கு, “எனக்குத் தெரிந்தவரை, அவர் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன். அவரை கவனித்துக் கொள்ள பிசியோ நிபுணர்கள் இங்கே இருக்கிறார்கள், அவர்கள் இதுகுறித்து முடிவெடுப்பார்கள்” என்றார். இதன்மூலம், இஷான் கிஷன் விளையாடுவார் என்பதும் உறுதியாகிறது. ஒரு பந்துவீச்சாளர் குறைக்கப்படலாம். இந்திய அணி மீண்டும் நம்பர் 8 வரை பேட்டர்கள் இருக்கும் காம்பினேஷனில் விளையாடும் எனலாம். 

மேலும் படிக்க | ‘சஞ்சு சாம்சனை தூக்க வாய்ப்புள்ளது…’ சஹால் சொல்லும் பாயிண்ட் – இந்திய அணியில் மாற்றமா?

மேலும் படிக்க | IND vs NZ 5th T20: இந்திய அணியின் பிளேயிங் 11.. CSK வீரர் உட்பட 2 பேர் நீக்கம்?

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.