Instagram : இன்று நாம் எதைப்பற்றி பேசுகிறோமோ, எதை ஆன்லைனில் தேடுகிறோமோ, அது உடனே நமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரமாக வந்து நிற்கிறது. இது ஏதோ மேஜிக் என்று நினைத்தால் அதுதான் இல்லை. உங்கள் Digital Activity-களை இன்ஸ்டாகிராம் ரகசியமாகத் தொடர்ந்து கண்காணிப்பதன் விளைவுதான் இது. இந்த பர்சனலைஸ்டு விளம்பரங்கள் சில நேரங்களில் உதவியாக இருந்தாலும், பல நேரங்களில் நமது அந்தரங்கத்தை யாரோ எட்டிப் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது. இது குறித்து கவலைப்படாதீர்கள். புதிய மெட்டா அப்டேட் படி, இதைக் கட்டுப்படுத்த முடியும்.
Add Zee News as a Preferred Source
1. Ad Preferences மாற்றுவது எப்படி?
– இன்ஸ்டாகிராம் செயலியைத் திறந்து, உங்கள் புரொபைல் பக்கத்தில் உள்ள மூன்று Menu கோடுகளை கிளிக் செய்யவும்.
– அங்குள்ள ‘Account Centre’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
– இப்போது ‘Ad preferences’ என்பதற்குச் செல்லவும்.
– அதில் ‘Manage info’ என்பதைக் கிளிக் செய்து, ‘Activity information from ad partner’ என்பதற்குச் செல்லவும்.
– அங்கே ‘No, don’t make my ads more relevant’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் மற்ற இணையதளங்களில் நீங்கள் தேடும் தகவல்களை இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவது நிறுத்தப்படும்.
2. மெட்டா ஆக்டிவிட்டியை முடக்குவது எப்படி?
இதுதான் மிக முக்கியமான செட்டிங். இதன் மூலம் உங்களைப் பற்றிய டேட்டாவை விளம்பர நிறுவனங்கள் இன்ஸ்டாகிராமுக்கு அனுப்புவதைத் தடுக்கலாம்.
– மீண்டும் Account Centre பகுதிக்குச் செல்லுங்கள்.
– அங்கே ‘Your Information and Permissions’ என்பதைக் கிளிக் செய்யவும்.
– இப்போது ‘Your Activity off Meta Technologies’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கே ‘Clear previous activity’ கொடுத்து பழைய டேட்டாவை அழியுங்கள், பிறகு ‘Manage future activity’ என்பதற்குச் சென்று அதைத் Disconnect செய்துவிடுங்கள். இந்த செட்டிங்ஸை மாற்றிய பிறகு விளம்பரங்கள் முழுமையாக நின்றுவிடாது. ஆனால், உங்களை உளவு பார்த்து வரும் விளம்பரங்கள் நின்றுவிடும். இனி பொதுவான விளம்பரங்கள் மட்டுமே திரையில் தோன்றும்.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More