வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி…? தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி  ஜனவரி 6ந்தேதி உருவாகும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக  தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. வடகிழக்குப் பருவமழை இன்னும் தமிழ்நாட்டிலிருந்து முழுமையாக விலகாத நிலையில், வங்கக்கடலில் உருவாகும் இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது வங்கக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டலச் சுழற்சிகளால் தென் மாவட்டங்களில் மழை பெய்து வரும் … Read more

மத்தியபிரதேசம்: "5 மாதக் குழந்தையை கடவுள் எடுத்துக்கிட்டார்"- குடிநீரில் கலந்த கழிவுநீர்; 9 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சாக்கடை நீர் கலந்த குடிநீரைக் குடித்து 7 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். விசாரணையில் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த கழிவறை இணைப்பு ஒன்று தவறுதலாக குடிநீர்க் குழாயுடன் கலந்திருந்தது தெரிய வந்தது. இந்தச் சாக்கடை தண்ணீரைக் குடித்து 5 மாத குழந்தை கூட உயிரிழந்த … Read more

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா: எங்கு இலவசமாக பார்க்கலாம்?

தளபதி விஜய்யின் இறுதி சினிமா மேடை: ‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா ஜனவரி 4 அன்று ZEE5-தளத்தில் ஒளிபரப்பாகிறது!! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.  

பழைய ஓய்வூதிய திட்டம்: வருகிறது முக்கிய அப்டேட் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்!

Old Pension Scheme: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை நாளை (ஜனவரி 3) வெளியிட உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஃபார்மின் உச்சகட்டத்தில் CSK வீரர்கள்.. இந்த தடவ மிஸ் ஆகாது.. பக்கா பிளான் – முழு விவரம்!

Chennai Super Kings Latest News: 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் 10 ஐபிஎல் அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்துக்கொண்டது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலம் சேர்க்கும் வீரர்களை தேர்வு செய்து வாங்கினர். சிஎஸ்கே அணி மினி ஏலத்திற்கு முன்பாகவே எதிர்கால விக்கெட் கீப்பராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் பேசி சஞ்சு சாம்சனை வர்த்தகம் செய்தது. இதற்கு விலையாக சிஎஸ்கே அணியின் … Read more

சல்லியர்கள்: "வேறு மாநிலத்தின் மண் சார்ந்த படத்தைப் புறக்கணித்தால் என்னவாகும்?" – சுரேஷ் காமாட்சி

இயக்குநர் கிட்டு இயக்கத்தில், நடிகர் கருணாஸ், சத்யதேவி, மகேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சல்லியர்கள். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு கென் ஈஸ்வர் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அப்போது ஊடகங்களிடம் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “சல்லியர்கள் திரைப்படம் எடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு முறையும் தேதி குறிப்பிட்டு வெளியீடு தள்ளிப்போடப்பட்டது. அதற்குக் காரணம் தியேட்டர் கிடைக்கவில்லை என்பதுதான். இறுதியாக இந்த வாரம் எந்தப் … Read more

கிச்சா சுதீப்பின் மார்க் படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம் இதோ!

Mark Movie Review: விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப் நடித்துள்ள மார்க் படம் இந்த வாரம் வெளியாகி உள்ளது. படத்தின் திரைவிமர்சனத்தை பற்றி பார்ப்போம்.    

மாதம் ரூ.58,000 சம்பளம்! தமிழ் தெரிந்தால் அரசு வேலை.. சூப்பர் வாய்ப்பு!

Tamil Nadu Government Job: இந்து சமய அறநிலையத்துறையில் சென்னையில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மிட்செல் ஸ்டார்கை நீக்கியதா ஆஸ்திரேலியா நிர்வாகம்? டி20 உலகக்கோப்பையில் இல்லை!

இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை ICC ஆண்கள் T20 உலக கோப்பை நடைபெற உள்ளது. இதற்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணி ஜனவரி 1 வியாழக்கிழமை அன்று தங்களது அணியை அறிவித்துள்ளது. இந்த 15 பேர் கொண்ட அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தேர்வு செய்யப்படாதது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான … Read more