66 சர்வதேச அமைப்புகளில் இருந்து விலக அமெரிக்கா முடிவு – டிரம்ப் அதிரடி உத்தரவு

உலகளாவிய ஒத்துழைப்பில் இருந்து மேலும் பின்வாங்கும் வகையில், அமெரிக்கா 66 சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து விலக முடிவு செய்துள்ளது. இந்த அமைப்புகள் வெறும் லெட்டர் பேட் அமைப்புகள் என்று டிரம்ப் நிர்வாகம் வர்ணித்துள்ள நிலையில் இதிலிருந்து விலகுவதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி 7, 2026 அன்று கையெழுத்திட்டுள்ளார். இந்த அமைப்புகளில் பெரும்பாலானவை ஐக்கிய நாடுகள் சபை (UN) சார்ந்த நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் ஆலோசனை அமைப்புகள் ஆகும். குறிப்பாக காலநிலை … Read more

மாதவ் காட்கில்: “வேள்பாரிக்கு பிறகு மேற்கு தொடர்ச்சி மலையை அதிகம் நேசித்தவர்"- பூவுலகின் நண்பர்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்த சிந்தனையைத் தூண்டும் வகையில் அறிக்கை தயாரித்த மூத்த சூழலியல் அறிஞர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளரான மாதவ் காட்கில் (83) நேற்று இரவு (7.1.2026) புனேயில் காலமானார்.. மக்கள், இயற்கை, வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இயங்கிய மாதவ் காட்கில், பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினராகச் செயலாற்றினார். 2010-ம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்பாக உருவாக்கப்பட்ட காட்கில் ஆணையம் என்று பிரபலமாக … Read more

டீன்-ஏஜ் காதலியை 65 வயதில் திருமணம் செய்த நபர்! லவ்வுன்னா இப்படி இருக்கணும்..

Kerala Rekindle Love Via Short Film : கேரளாவில், ஒரு நபர் தான் டீன் – ஏஜில் காதலித்த ஒருவரை தனது 65வது வயதில் திருமணம் செய்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

பல பாடல்களுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ்..ஒரு பாடல் கூட பாடாதது ஏன்? அவரது பதில்..

Reason Why Harris Jayaraj Never Sang Song : பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், இதுவரை பல நூறு பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இருப்பினும் அவர் ஒரு பாடலை கூட தனது சொந்த குரலில் பாடியது கிடையாது. அது ஏன்?  

விஜய் இப்போ வசனம் பேசுவாரா… ஜனநாயகன் பிரச்னை – அப்பாவு கேட்ட நறுக் கேள்வி!

TN Speaker Appavu: சிபிஐ விசாரணைக்கு சம்மன் அனுப்பி உள்ள நிலையில், விஜய் இப்போது வீரவசனம் பேசுவாரா என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பி உள்ளார். 

விஜய் ஹசாரே டிராபி: தமிழ்நாடு அணி அவுட்… காலிறுதியில் 8 அணிகள் – போட்டிகள் எப்போது?

Vijay Hazare Trophy 2025-26, Quarter Finals Schedule: உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை 2025-26 தொடர் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி தொடங்கியது. நாட்டின் பல்வேறு நகரங்களில் லீக் போட்டிகள் நடைபெற்றன. லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன. Add Zee News as a Preferred Source Vijay Hazare Trophy 2025-26: இனி நாக்-அவுட் போட்டிகள்  பிராதனமாக மொத்தம் 32 அணிகள் இத்தொடரில் இடம்பெறும். 4 பிரிவுகளாக 32 அணிகளும் … Read more

ஜனநாயகன்: “சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு…" – சாடும் தமிழிசை

விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் ‘ஜனநாயகன்’ பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பி.டி.ஆஷா அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். … Read more

அன்புமணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் – அவருடன் எடப்பாடி பேசியது தெருக்கூத்து! ராமதாஸ்

சென்னை: “தந்தைக்கு துரோகம் செய்த அன்புமணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்”  என்று கூறிய பாமக நிறுவனர்  ராமதாஸ் அவருடன் கூட்டணி குறித்து  எடப்பாடி பழனிச்சாமி பேசியது நீதிமன்ற அவமதிப்பு என கூறினார். அன்புமணி ஒரு மோசடிப்பேர்வழி. அன்புமணி யாருடன் கூட்டணி பேசினாலும் செல்லத்தக்கதல்ல. அன்புமணியுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேசியது நீதிமன்ற அவமதிப்பு  என்றவர்,  கூட்டணி குறித்து பேச கட்சி நிறுவனரின் அனுமதி பெறவேண்டும் என கட்சி விதிகளில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி சந்திப்பு ஒரு … Read more

சோதனையின்போது உள்ளே நுழைந்த மம்தா; ஆவணங்களைக் கைப்பற்றியதாக குற்றம்சாட்டும் ED – நடந்தது என்ன?

அரசியல் ஆலோசனை & தேர்தல் யுக்திகளை வகுக்கும் நிறுவனமான ‘ஐ-பேக்’ I-PAC கொல்கத்தா அலுவலகம் மற்றும் அதன் இணை நிறுவனர் பிரதிக் ஜெயினின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை இன்று (ஜன. 8) சோதனை நடத்தியிருக்கின்றனர். ‘ஐ-பேக்’ நிறுவனத்தின் இயக்குநரான பிரதிக் ஜெயின், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவராகவும் இருக்கிறார். இந்த நிறுவனம் தான் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கிறது. ஆவணங்களைக் கைப்பற்றிய மம்தா ஆவணங்களைக் … Read more

ஆதாரங்களை அகற்றிய மம்தா பானர்ஜி… ED-ன் பெரிய குற்றச்சாட்டு – கொல்கத்தாவில் நடப்பது என்ன?

Mamata Banerjee: I-PAC அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டபோது, மம்தா பானர்ஜி ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களை வலுக்கட்டாயமாக அகற்றியதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி உள்ளது.