பறிபோன CSK வீரரின் வாய்ப்பு.. டி20 உலகக் கோப்பைக்கு தயாரான மாற்று வீரர்? முழு விவரம்

Sanju Samson Latest News: வரும் பிப்ரவரி 07ஆம் தேதி டி20 உலகக் கோப்பை தொடங்க இருக்கிறது. இம்முறை இந்தியாவில் நடப்பதால் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதேசமயம் மீண்டும் இந்திய அணி கோப்பையை வென்று அதனை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது. இந்த சூழலில், இத்தொடருக்கு முன்பாக இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி முடித்திருக்கிறது. 

Add Zee News as a Preferred Source

நேற்று (ஜனவரி 31) நிறைவடைந்த இத்தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இது டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆதிக்கத்தை காட்டுகிறது. இதுவரை சொதப்பி வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் இத்தொடரின் மூலம் நல்ல ஃபார்மிற்கு திரும்பி உள்ளார். இது ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுட்த்தினாலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் கடுமையாக சொதப்பியது அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. 

நியூசிலாந்து தொடரில் சொதப்பிய சஞ்சு சாம்சன் 

இத்தொடரில் ஒரு போட்டியில் கூட சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடவில்லை. மொத்தமாகவே 46 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். உலகக் கோப்பை நெருங்கி வரும் சமயத்தில் இப்படியான சொதப்பல் அவரது வாய்ப்பை கேள்விக்குறியாக்குகிறது. 

சுப்மன் கில்லை கழட்டிவிட்ட இந்திய அணி நிர்வாகம் 

சுப்மன் கில் இந்திய டி20 அணிக்கு மீண்டும் திரும்பியபோது சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. ஆனால் சுப்மன் கில் சரியாக விளையாடாததால், சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு பெருகியது. இதனால் தேர்வுக்குழுவும் சுப்மன் கில்லை விலக்கி சஞ்சு சாம்சனுக்கு இடம் அளித்து டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தது. இந்த சூழலில், சஞ்சு சாம்சனும் சொதப்பி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இஷான் கிஷனுக்கு பிரகாசமான வாய்ப்பு 

மறுபக்கம் திலக் வர்மா இடத்தில் ஆடிய இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி உள்ளார். இத்தொடரில் 2 சதங்களை விளாசி அசத்தி உள்ளார். இதனாலே சஞ்சு சாம்சனின் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அதாவது அணிக்கு திலக் வர்மா திரும்பும் பட்சத்தில் சஞ்சு சாம்சனை வெளியே அமர வைத்துவிட்டு இஷான் கிஷனை அவருக்கு பதிலாக விளையாட வைக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஒருவேளை திலக் வர்மா அணிக்கு திரும்பவில்லை என்றால், அவரது இடத்தில் இஷான் கிஷனை விளையாட வைத்துவிட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். 

சஞ்சு சாம்சன் விமர்சனம் 

அப்படியும் சஞ்சு சாம்சன் சொதப்பினால் அவரை பெஞ்சில் அமர வைக்கப்போவது உறுதி என தெரிகிறது. முன்னதாக ரசிகர்கள் பலரும் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், நியூசிலாந்து தொடரின் 5 போட்டிகளிலும் சொதப்பியதால் தற்போது கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சிலர் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டு முழுவதும் சொதப்பினார், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டது. சர்வதேச டி20ல் 3 சதங்கள் அடித்த சஞ்சு சாம்சன் ஒரு தொடரில் சொதப்பியதால் அவரை மோசமான வீரர் என முத்திரை குத்துவது நியாமாக இருக்காது என ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி 

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங். 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.