Sanju Samson Latest News: டி20 உலகக் கோப்பை தொடங்க இருக்கும் நிலையில், இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4க்கு 1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது அசத்தி இருப்பது அனைவரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் இந்திய டி20 அணியின் நட்சத்திர தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் கடுமையாக சொதப்பியது சற்று சோகத்தையும் அவருக்கு எதிராக விமர்சனங்களையும் கிளப்பி இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
Sanju Samson In New Zealand T20 Series: நியூசிலாந்து தொடரில் சொதப்பிய சஞ்சு சாம்சன்
தொடரின் 5 போட்டிகளிலும் விளையாடிய சஞ்சு சாம்சன், வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்தார். அவரது சொந்த மைதானமான திருவனந்தபுரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் சொதப்பினார். அவர் அணியில் சேர்க்கப்படாத போது, ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை என அனைவருமே அவருக்கு ஆதரவாக பேசி இருந்தனர். இந்த சூழலில்தான் அவர் டி20 உலகக் கோப்பையில் சேர்க்கப்பட்டிருந்தார். சுப்மன் கில்லை நீக்கிவிட்டு அணியில் சேர்க்கப்பட்ட அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், நியூசிலாந்து தொடரின் மூலம் அந்த எதிர்பார்ப்பை எல்லாம் பெய்யாக்கி விட்டார்.
இதனால், டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பிளேயிங் 11ல் அவருக்கு இடம் கிடைக்காது என பேசப்பட்டு வருகிறது. அவருக்கு பதிலாக நியூசிலாந்து தொடரில் திலக் வர்மா இடத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் களமிறங்க உள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், சஞ்சு சாம்சன் விரைவில் ஃபார்முக்கு திரும்புவார் என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா அவருக்கு ஆதரவாக பேசி உள்ளார்.
Virat Kohli, Rohit Sharma: விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கும் இதுபோன்ற நிலைமை இருந்தது
இது தொடர்பாக பேசிய அவர், இது போன்ற ஒரு சூழல் நிலையில், அனுபவம் வாய்ந்த ரோகித் சர்மா, விராட் கோலி போன்றோருக்கும் நடந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூட கடந்த ஆண்டில் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. அவருக்கு ஒரு மோசமான ஃபார்மில் இருந்தார். ஆனால் தற்போது அவர் நியூசிலாந்து தொடரில் ஃபார்முக்கு திரும்பி உள்ளார். அது நல்ல விஷயம்.
Sanju Samson: சஞ்சு சாம்சன் விரைவில் ஃபார்முக்கு திரும்புவார்
அதேபோல், தற்போது ஃபார்ம் அவுட்டில் இருக்கும் சஞ்சு சாம்சன், விரைவில் ஃபார்முக்கி திரும்புவார். நியூசிலாந்து தொடர் அவருக்கு சரியாக அமையவில்லை அவ்வளவுதான். அதனால் அவர் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபிப்பார் என ராபின் உத்தப்பா சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.
ராபின் உத்தப்பா கூறுவது போல், சஞ்சு சாம்சன் விரைவில் ஃபார்முக்கு திரும்பும் பட்சத்தில் டி20 உலகக் கோப்பையில் அவரது இடம் உறுதியாகும். இல்லையென்றால், அவரது இடத்தில் இஷான் கிஷன் போன்று சில வீரர்களை கம்பீர் களமிறக்க திட்டமிடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
India Squad For T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.
About the Author
R Balaji