U19 உலகக் கோப்பை: இந்திய அணி சாம்பியன்… 6வது கப் – CSKக்கு அடுத்த கேப்டன் கிடைச்சாச்சு!

ICC U19 World Cup 2026, IND-Y vs ENG-Y:  ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 2000, 2008, 2012, 2018, 2022 ஆகிய 5 ஆண்டுகளில் இந்திய அணி ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றிருந்தது.

Add Zee News as a Preferred Source

தோல்வியே காணாத இந்திய அணி

ஜிம்பாப்வே, நமீபியாவில் கடந்த ஜனவரி 15ஆம் தேதி ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. ஆயுஷ் மாத்ரே தலைமையில் இந்திய அணி களமிறங்கியிருந்தது. குரூப் சுற்றில் அமெரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளை வென்றும்; சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்தும்; அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது. 

இங்கிலாந்தை சூறையாடிய சூர்யவன்ஷி

இன்றைய இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 411 ரன்களை குவித்தது. வைபவ் சூர்யவன்ஷி இன்று 80 பந்துகளில் 15 பவுண்டரி, 15 சிக்ஸர் உள்பட 175 ரன்களை குவித்து அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆயுஷ் மாத்ரே 53, அபிக்யான் குண்டு 40, வேதாந்த் திரிவேதி 32, விஹான் மல்ஹோத்ரா 30, என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தொடர் நாயகன் யார் தெரியுமா?

ஆனால், இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக காலப் ஃபால்கோனர் 67 பந்துகளில் 9 பவுண்டரி, 7 சிக்ஸர் உள்பட 115 ரன்களை குவித்தார். இந்திய அணி பந்துவீச்சில் தமிழக வீரர் ஆர்.எஸ். அம்பிரிஷ் 3 விக்கெட்டையும், தீபேஷ் தேவேந்திரன் மற்றும் கனிஷ்க் சௌகான் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், கிலான் பட்டேல், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வைபவ் சூர்யவன்ஷி வென்றார்.

சிஎஸ்கே அணிக்கு எதிர்கால கேப்டன் கிடைச்சாச்சு!

ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரை ஆயுஷ் மாத்ரே தலைமையில் இந்திய அணி வென்றிருப்பதால், சிஎஸ்கே ரசிகர்களுக்கு டபுள் மகிழ்ச்சி எனலாம். தோனிக்கு பின் ருதுராஜ்ஜை கண்டுபிடிக்க சிஎஸ்கே கடுமையாக போராடியது. தற்போது சஞ்சு சாம்சன், உர்வில் பட்டேல் உள்ளிட்ட கேப்டன்ஸி மெட்டீரியல் வீரர்கள் சிஎஸ்கே அணியில் இருக்கிறார்கள். ஆனால் இவர்களை விட இளமையானவரான ஆயுஷ் மாத்ரே, நிச்சயம் எதிர்காலத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை 2026: இந்திய அணி போட்டி விவரம்.. முழு அட்டவணை! எதில் பார்க்கலாம்?

மேலும் படிக்க | IND vs USA: இந்தியா பிளேயிங் 11.. முக்கிய பவுலர் காயம்! சஞ்சு சாம்சனுக்கு இடமிருக்கா?

மேலும் படிக்க | ஹர்ஷித் ராணாவுக்கு காயம்… இந்திய அணி குறிவைக்கும் 3 பௌலர்கள் – CSK வீரரும் இருக்காரு!

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.