CSK Team For Sale: சிஎஸ்கே அணி விற்பனைக்கு? வெளியான அதிர்ச்சிகரமான தகவல்!

ஐபிஎல் தொடரில் இதுவரை ஐந்து முறை கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்து வருகிறது. கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பத்தாவது இடத்தை பிடித்தது. இதனை தொடர்ந்து அணியில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளனர். இதுவரை அனுபவமாய்ந்த வீரர்களுக்கு பின்னால் சென்று வந்த சென்னை அணி, தற்போது இளம் வீரர்களை நோக்கி படையெடுத்துள்ளது. தோனி இந்த ஆண்டுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவது உறுதியாகி உள்ள நிலையில், இந்த ஆண்டு சென்னை அணி எப்படி விளையாடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடைபெறாது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இறுதி முடிவு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

சென்னை அணி விற்பனைக்கா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விற்பனைக்கு வர உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் விற்கப்பட்டதை தொடர்ந்து இந்த வதந்தி அதிகமாக பேசப்பட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டு கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விற்பனைக்கு வந்தது. அது பெங்களூரு அணி ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விற்பனைக்கு வருகிறது என்ற தகவல் மேலும் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. இந்நிலையில் ரசிகர்களின் குழப்பத்தை தீர்க்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

நிர்வாகம் சொன்னது என்ன? 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சிஎஸ்கே அணி விற்பனைக்கு வர உள்ளதாக வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தியே. இதில் ஒரு துளியும் உண்மை இல்லை. சென்னை அணியின் நிர்வாகித்திலும் அல்லது உரிமையாளர் கட்டமைப்பிலும் எந்த ஒரு மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெளிவுபடுத்தி உள்ளார். என். சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்ந்து நடத்துவார்கள் என்றும் உறுதிப்படுத்தி உள்ளார். 

சமீபத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பெரும் பங்குகளை அல்ட்ராடெக் நிறுவனம் வாங்கியது. அதனை தொடர்ந்து தான் சிஎஸ்கே அணி விற்பனைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் சிஎஸ்கே அணி ஒரு தனி நிறுவனம் என்றும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து சிஎஸ்கே ஏற்கனவே பிரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் விற்கப்பட்டாலும், சென்னை அணிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. அல்ட்ராடெக் நிறுவனம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 55 சதவீத பங்குகளை வாங்கி உள்ளது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மாற்றப்படுமா என்ற குழப்பமே நிலவியது. தற்போது அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து 2015 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி பிரிக்கப்பட்டது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் என்ற தனி நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு நிம்மதி!

சிஎஸ்கே விற்பனைக்கு அல்ல என்ற இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கோடிக்கணக்கான சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. தல தோனி இருக்கும் வரை சிஎஸ்கே சிஎஸ்கேவாகவே இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மேலும், வரவிருக்கும் ஐபிஎல் 2026 தொடருக்காக அணி நிர்வாகம் தீவிரமாக தயாராகி வருகிறது. சஞ்சு சாம்சன் போன்ற நட்சத்திர வீரர்களை டிரேட் முறையில் அணிக்குள் கொண்டு வந்துள்ளதால், இந்த ஆண்டு அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.