ரவீந்திர ஜடேஜாவுக்கு மீண்டும் ஆப்பு… ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் அறிவிப்பு!

IPL 2026 Rajasthan Royals: ஐபிஎல் 2026 தொடரில் கடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ரவீந்திர ஜடேஜாவுக்கு மீண்டும் கேப்டன்ஸி மறுக்கப்பட்டுள்ளது. 

Add Zee News as a Preferred Source

சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சிஎஸ்கேவுக்கு வந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்து வந்தது. அதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசியாக 2008ஆம் ஆண்டில் கோப்பையை வென்ற நிலையில், அதன்பின் கோப்பையை வெல்லவே இல்லை.

சிஎஸ்கே – ராஜஸ்தான் டிரேடிங்

ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே வீரர்கள் டிரேட் செய்யப்பட்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரண் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் டிரேட் செய்யப்பட்டனர். ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா டிரேடிங் செய்யப்பட்ட பின் மிகப்பெரிய டிரேடிங்காக இது பார்க்கப்பட்டது. 2023 சீசனில் ஜடேஜாவின் அந்த பவுண்டரிதான் சிஎஸ்கேவுக்கு 5வது கோப்பையை பெற்றுக்கொடுத்தது. 10 ஆண்டுகளுக்கு மேலாக சிஎஸ்கேவில் விளையாடி வந்த ஜடேஜாவையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அடையாளமாக திகழ்ந்த சஞ்சு சாம்சனும் வெவ்வேறு அணிகளுக்கு போனது ஐபிஎல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சஞ்சு சாம்சனுக்கு கேப்டன்ஸி இல்லை

அதேநேரத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2021ஆம் ஆண்டில் இருந்து கடந்த 5 சீசன்களாக சஞ்சு சாம்சன் கேப்டனாக செயல்பட்டார். கடந்த சீசனில் காயம் காரணமாக பெரும்பாலன போட்டிகளில் இம்பாக்ட் வீரராக வந்ததால் கேப்டன்ஸியை ரியான் பராக் கவனித்துக்கொண்டார். இதனிடையே சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுக்கு வந்தாலும், ருதுராஜ் கெய்க்வாட்தான் கேப்டனாக செயல்படுவார் என சிஎஸ்கே நிர்வாகம் உறுதிப்படுத்திவிட்டது. சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் பேட்டராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019இல் இருந்து ரியான் பராக்…

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் யார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருந்தது. ரியான் பராக் நியமிக்கப்படுவாரா அல்லது அனுபவ வீரர் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், ரியான் பராக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2019ஆம் ஆண்டில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரியான் பராக் விளையாடி வருகிறார். இவர் 84 போட்டிகளில் 1566 ரன்களை குவித்துள்ளார். ரியான் பராக்கிற்கு கேப்டன்ஸி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஜடேஜாவுக்கு மீண்டும் கேப்டன்ஸி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 2022 சீசனில் சிஎஸ்கேவின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டு பின்னர் அதே சீசனில் கேப்டன்ஸியில் இருந்து விலகினார், தோனியிடம் கேப்டன்ஸி ஒப்படைக்கப்பட்டது. இது அவருக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. அதன்பின் அவருக்கு கேப்டன்ஸி வாய்ப்பு இந்திய அணியிலும் கிடைக்கவில்லை.

ராஜஸ்தானின் 7வது கேப்டன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கடந்த காலங்களில் ஷேன் வார்னே, ஷேன் வாட்சன், ராகுல் டிராவிட், ஸ்டீவ் ஸ்மித், அஜிங்கயா ரஹானே, சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் தலைமை தாங்கி உள்ளனர். ஷேன் வார்னே தலைமையில்தான் 2008இல் ராஜஸ்தான் கோப்பையை வென்றது. அதன்பின் 2022ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன் தலைமையில் இறுதிப்போட்டி வரை வந்தது.

மேலும் படிக்க |  ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஜிம்பாப்வே… டி20 உலகக் கோப்பையில் பெரிய அப்செட் – இலங்கைக்கு பிரஷர்!

மேலும் படிக்க | IND vs PAK: இந்தியா பிளேயிங் 11.. இப்போட்டியிலும் அபிஷேக் சர்மா விலகல்.. ஆனா சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை?

மேலும் படிக்க | இதுதான் என்னுடைய ஒரே இலக்கு.. அதுவரை கிரிக்கெட்டை விட்டு செல்ல மாட்டேன் – ரோகித் சர்மா!

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.