டி20 உலகல் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடர் ஒவ்வொரு நாளும் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. இந்திய அணியை பொறுத்தவரையில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் மூன்று போட்டிகளிலுமே வென்று அசத்தி உள்ளது.
Add Zee News as a Preferred Source
குறிப்பாக நேற்று (பிப்ரவரி 15) பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இப்போட்டியை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர். அதிலும் இப்போட்டியில் நிச்சயம் பாகிஸ்தான் இந்திய அணிக்கு டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து
ஆனால் பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் கடுமையாக சொதப்பிதால், இந்திய அணியின் பக்கம் முழுவதுமாக போட்டி சென்றது. இது அந்நாட்டு அணி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. அதேசமயம் பாகிஸ்தானின் இந்த தோல்வி பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் மட்டும் இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி மோதிவிடக்கூடாது என கூறி உள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் மீண்டும் விளையாடக்கூடாது
இது தொடர்பாக பேசிய அவர், பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு வர வேண்டாம் என நினைக்கிறேன். ஏனென்றால் இந்தியாவுடனான இந்த தோல்வி அவர்களுக்கு ஒரு மோசமான தோல்வி. ஒருவேளை பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு வந்தாலும், இந்திய அணி எளிதாக வென்றுவிடும். அது உறுதி.
நேற்றைய போட்டியை பொறுத்தவரையில், இந்திய அடித்த 175 ரன்கள் என்பது 250 ரன்கள் அடித்ததற்கு சமம். அது நடுநிலையான ஆடுகளம். இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணி ஒரு சிறிய போராட்டத்தை கூட அளிக்கவில்லை. எனவே, மீண்டும் இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி விளையாடக்குடாது. இவ்வாறு ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுமா பாகிஸ்தான்?
இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி தகுதி பெறுமா என்பது சந்தேகத்தில் உள்ளது. அந்த அணிக்கு அடுத்ததாக நமீபியா அணியுடன் உள்ளது. இப்போட்டி நாளை மறுநாள் (பிப்ரவரி 18) நடைபெற இருக்கிறது. ஒருவேளை இந்த போட்டியில் பாகிஸ்தான் வென்றால், சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இல்லையென்றால், யுஎஸ்ஏ அணி தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji