தூபேவின் பேட்டிங் சிறப்பாக மாறியது எப்படி…? தோனி கொடுத்த முக்கிய டிப்ஸ்

ICC T20 World Cup 2026, Shivam Dube: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று போட்டிகள் நாளையுடன் (பிப்.  20) நிறைவுபெறுகிறது.

Add Zee News as a Preferred Source

சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் இந்தியா, ஜிம்பாப்வே, மேற்கு இந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா அணிகளும்; 2வது பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. முதல் பிரிவு அணிகள் இந்தியாவிலும், இரண்டாவது பிரிவு அணிகள் இலங்கையிலும் சூப்பர் 8 சுற்றை விளையாட உள்ளார்கள்.

இந்திய அணியின் சூப்பர் 8 போட்டிகள்

இந்திய அணி வரும் ஞாயிறு (பிப். 22) அன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தென்னாப்பிரிக்க அணியையும், பிப். 26ஆம் தேதி அன்று சென்னை சேப்பாக்கத்தில் ஜிம்பாப்வே அணியையும், மார்ச் 1ஆம் தேதி அன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணியையும் எதிர்கொள்கிறது. குரூப் சுற்றை பொருத்தவரை அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்தியிருக்கிறது.

4 வெவ்வேறு ஆட்ட நாயகன்கள்…

இதில் ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு வீரர்கள் ஆட்டநாயகன் விருதை வென்றார்கள். அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ், நமீபியாவுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷன், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிவம் தூபே ஆகியோர் ஆட்டநாயகன் விருதை பெற்றனர். 

சிவம் தூபே – சைலண்ட் வாரியர்

இந்நிலையில், நேற்றைய நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 31 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரி என 66 ரன்களை சிவம் தூபே அடித்தார். அபிஷேக் சர்மா உள்பட அனைத்து பேட்டர்களும் ரன் அடிக்க திணறிய நிலையில், இவரது ஆட்டம் தனித்துவமாக விளங்கியது. அதுவும் பேக் ஆப் லெந்த் பந்துகள், லெந்த் பந்துகளை சிக்ஸர் அடிக்கும் திறன் பெற்றிருக்கிறார். ஷார்ட் பிட்ச் பந்துகளையும் இவர் சிறப்பாக அடிக்கத் தொடங்கி உள்ளார். இந்திய அணிக்கு பல சிறப்பான இன்னிங்ஸை தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி தொடங்கி நடப்பு தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி வரை என சிறிது சிறிதாக இவர் அளித்த பங்களிப்பு கவனிக்கப்படாமலேயே போயுள்ளது.

தோனி கொடுத்த டிப்ஸ்

இந்தச் சூழலில், சமீப காலமாக சிறப்பாக இருக்கும் அவரது பேட்டிங் குறித்து சிவம் தூபே தற்போது பேசியிருக்கிறார். நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு பின் சிவம் தூபே பேசுகையில், “ஐபிஎல் தொடரில் ஒரு காலகட்டத்தில், ஷார்ட் பந்துகளை எதிர்கொள்வதில் நான் கொஞ்சம் சிரமப்பட்டேன். அந்த நேரத்தில் என்னால் அவற்றை அவ்வளவு சிறப்பாக அடிக்க முடியவில்லை.

ஆனால், அந்த பந்துகளில் நான் ஆதிக்கம் செலுத்த வேண்டும், எனக்கு அந்த சக்தி இருந்தால், நான் ஏன் ஒரு விஷயத்திற்காக பின்தங்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். அதனால் போட்டிகள் இல்லாத நேரத்தில் நான் அந்த விஷயத்தில் நிறைய உழைத்தேன். மஹி பாய் (தோனி) என்னிடம் அந்த பந்தில் சிக்ஸ் அடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை, ஒரு பவுண்டரியை கூட அடிக்கலாம் அல்லது ஒரு சிங்கிள் எடுக்கலாம் என்று சொன்னார். நான் பேட்டிங் செய்ய வரும்போது, அந்த விஷயம் எப்போதும் என் மனதில் இருக்கும்” என்றார். தோனியின் சிறு அறிவுரை எப்படி அவரது ஆட்டத்தையே மாற்றியிருக்கிறது என்பது தூபே தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | பாகிஸ்தான் வெற்றி! உறுதியானது சூப்பர் 8 அட்டவணை! மீண்டும் இந்தியா vs பாக்?

மேலும் படிக்க | முகமது ஷமிக்கு மீண்டும் வாய்ப்பே இல்லை? காரணம் என்ன தெரியுமா?

மேலும் படிக்க | தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்யும் கவுதம் கம்பீர்? புதிய ஆபர்!

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.