இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் மற்றும் தனது மகன் அகஸ்தியா ஆகியோருக்கு சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் சொகுசு காரை பரிசாக கொடுத்துள்ளார். விவாகரத்துக்கு பிறகும் மகனின் மீதான அன்பிற்காக அவர் செய்துள்ள இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இதற்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். கருப்பு நிற லேண்ட் ரோவர் டிஃபெண்டர் சொகுசு காருடன் நடாஷா ஸ்டான்கோவிக் மற்றும் அவரது மகன் அகஸ்தியா போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த காரின் விலை மாடல் மற்றும் கஸ்டமைசேஷனை பொறுத்து ரூ. 3 கோடி முதல் ரூ. 4 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
Add Zee News as a Preferred Source
Hardik Pandya gifted a 4 crore worth Black Defender to his son Agastya Pandya and ex-wife Natasa Stankovic
– Hardik Pandya taking care of his ex-wife even after the divorce.
– Hardik Pandya is truly a gentleman pic.twitter.com/98bH1evA7H
— Cricket Central (@CricketCentrl) February 22, 2026
ஹர்திக் பாண்டியா!
மும்பையில் உள்ள நவநீத் மோட்டார்ஸ் மூலம் ஹர்திக் பாண்டியா இந்த காரை பரிசளித்துள்ளார். இந்த செய்தி உண்மை தானா என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், அந்த கார் டீலர் நிறுவனம், தங்களது சமூக வலைதள பக்கத்தில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியான பதிவில், “திரு. ஹர்திக் பாண்டியா தனது புதிய டிஃபெண்டரை வாங்குவதற்கு மீண்டும் ஒருமுறை நவநீத் மோட்டார்ஸை தேர்ந்தெடுத்துள்ளார். இது அகஸ்தியா பாண்டியா மற்றும் திருமதி. ஸ்டான்கோவிக்குக்கு வழங்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா
ஹர்திக் பாண்டியா மற்றும் செர்பிய மாடலான நடாஷா ஸ்டான்கோவிக் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் விவாகரத்து பெற்று பிரிந்தனர். கணவன், மனைவியாக இருவரும் பிரிந்தாலும், ஒரு பெற்றோராக தங்களது மகனின் வளர்ப்பிலும், நலனிலும் எந்த குறையும் இல்லாமல் இருவரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தற்போது ஹர்திக் பாண்டியாவுக்கும், நடிகை மஹிகா சர்மாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும், மஹிகாவின் 25-வது பிறந்தநாளின்போது ஹர்திக் ஒரு ரொமாண்டிக் வீடியோவை வெளியிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஹர்திக் தனது வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டாலும், தனது மகனுக்கான கடமையில் எவ்வித சமரசமும் செய்யாமல் இருப்பதை இந்த பரிசு காட்டுகிறது.
நடாஷாவின் நகர்வு
ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து பிரிந்த நடாஷா ஸ்டான்கோவிக், தற்போது மீண்டும் தனது வேலை மற்றும் ஃபிட்னஸ் மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். பொது நிகழ்ச்சிகளிலும், நேர்காணல்களிலும் பங்கேற்று வரும் அவர், “வாழ்க்கையில் நான் சந்தித்த சவால்கள் என்னை மேலும் வலிமையாக்கியுள்ளன. நான் மீண்டும் காதலை ஏற்க தயாராகவே இருக்கிறேன்” என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
About the Author
RK Spark