சென்னை: திமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள் ஒபிஎஸ் மற்றும் ஐயப்பன் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர். அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓபிஸ், வேறு வழியின்றி இன்று திமு கதலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் அடைக்கலம் அடைந்தார். அவருடன், ஓபிஎஸ் மகனும், முன்னாள் எம்.பியுமான ரவீந்திரநாத் குமாரும், ஐயப்பன் எம்எல்ஏவும் திமுகவில் இணைந்தனர். இதை தொடர்ந்து அவர் தலைமை செயலகம் சென்று ஓபிஎஸ், அங்கு சட்டசபை செயலாளரிடம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதம் வழங்கினார். […]