சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நீண்டநாளாக காத்திருந்த ஒரு பெரிய திட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. திருவான்மியூர் – உத்தண்டி இடையே 13.3 கி.மீ நீள உயர்மட்ட சாலை பணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் இதுவரை இல்லாத மிக நீளமான நான்கு வழிச்சாலை உயர்மட்டப் பாலமாக, சென்னை நகரில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 13.3 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட உள்ள இந்த திட்டத்திற்கு சுமார் ₹2,100 கோடி செலவாகும் […]