திரைத்துறையில் இடையூறு செய்பவர்கள் யார்?- நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த பதில்.!

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.

இப்படம் இன்று (பிப்.27) வெளியாகி இருக்கிறது.

தாய் கிழவி
தாய் கிழவி

திரையரங்கில் படத்தைப் பார்த்த பிறகு ‘தாய் கிழவி’ படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கின்றனர்.

அப்போது பேசிய சிவகார்த்திகேயனிடம், ‘திரைத்துறையில் சிலர் இடையூறு செய்கிறார்கள் என்று சொல்கிறீர்கள், அவர்கள் யார்?’ என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், ” அது யாருன்னு எல்லோரும் கேட்குறீங்க. ஆனால் நான் அது யாருன்னு சொன்னா யூடியூப் சேனலுக்கு இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வியூஸ் வரும். இன்னொருத்தரை குறை சொல்லனும்’னு நான் அதை சொல்றது இல்ல.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

இந்த மாதிரியான விஷயங்களைத் தாண்டி தான் வரோம் என்கிறதை தான் சொல்றோம். ராதிகா மேம் கிட்டத்தட்ட 48 வருஷமாகத் திரைத்துறையில இருக்காங்க. அவுங்களும் இதை அனுபவிச்சு இருப்பாங்க. கம்பிளைன் பண்றதுக்காக அதையெல்லாம் நான் சொல்ல-ல. இந்த மாதிரியான சூழல்களைக் கடந்துதான் படங்களைப் பண்றோம்’னு சொல்றேன் அவ்வளவுதான்” என்று கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.