சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க, அமலாக்கத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமலாக்க இயக்குநரகம் (ED) தலைவர் ராகுல் நவீன் மூன்று நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) ஆகியவற்றின் கீழ் அமலாக்க இயக்குநரகம் கையாளும் பல்வேறு வழக்குகளின் நிலையை ஆய்வு செய்வதற்காக அவர் வந்துள்ளதாக கூறப்படுகிறது. […]