"நான் சினிமாவுக்கு வர்றதுக்கு விஜய் சாரும் ஒரு காரணம்.!"- மாரி செல்வராஜ்

இயக்குநர் மாரி செல்வராஜ் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது மாரி செல்வராஜிடம் விஜய்யின் தீவிர ரசிகரா நீங்கள் என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

விஜய்
விஜய்

அதற்கு பதிலளித்த அவர், ” சிறு வயதில் இருந்தே விஜய் சாரின் சினிமா மீது எனக்கு பிரியம் உண்டு. நான் சினிமாவுக்கு வருவதற்கு அவரும் ஒரு காரணம்.

ஒரு ரசிகனாக விஜயை எனக்கு பிடிக்கும். தியேட்டருக்கு செல்ல விஜய் சாரும் ஒரு முக்கியமான காரணம்” என்றிருக்கிறார்.

தொடர்ந்து விஜய்யின் அரசியல் குறித்து பேசிய அவர், ‘யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு நல்லது செய்யலாம்.

யார் வந்தாலும் நாம் வரவேற்க வேண்டும். அவரின் அரசியல் நிலைப்பாடு முழுமையாக வெளிப்படும் போது புரிந்து கொள்ள முடியும். அவருக்கு என் வாழ்த்துகள்” என்று கூறியிருக்கிறார்.

தனுஷ் - மாரி செல்வராஜ்
தனுஷ் – மாரி செல்வராஜ்

தொடர்ந்து அடுத்தப்படம் குறித்து பேசிய மாரி செல்வராஜ்,” அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன்.

செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கும். இது ஒரு Fantasy, வரலாற்று மற்றும் அரசியல் சார்ந்த திரைப்படம். என் கேரியரில் மிகப்பெரிய படமாக இது இருக்கும்.” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.