'விஜய்யே மன உளைச்சலில் இருப்பார்!' – அறிவாலயத்தில் கருணாஸ் பேட்டி

அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த கருணாஸ், பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக சென்றதாக கூறினார்.

கருணாஸ்
கருணாஸ்

அவர் பேசியதாவது,

‘மீண்டும் திமுகவை ஆட்சியிலேற்ற உறுதியாக செயல்படுவேன். மகிழ்ச்சியாக அறிவாலயம் வந்தேன். மகிழ்ச்சியாக திரும்பி செல்கிறேன். ஆர்.எஸ்.எஸ்க்கும் எடப்பாடிக்கும் தமிழகத்தில் இடமில்லை.

எனக்கான தொகுதி எண்ணிக்கை உறுதியாகிவிட்டது. அதனால்தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 234 தொகுதிகளில் எங்கு நிற்க சொன்னாலும் நிற்பேன்.

என்னுடைய பலம் எனக்கு தெரியும். புதிதாகவும் நிறைய கட்சிகள் வந்திருக்கின்றன. அதனால் தொகுதிகளை விட தளபதியை மீண்டும் ஆட்சியில் ஏற்றுவதுதான் முக்கியம்.

கருணாஸ்
கருணாஸ்

நல்ல மனநிலையில் இருக்கிறேன். இப்போது விஜய்யைப் பற்றி பேசாதீர்கள். அவரே மனவேதனையில் மன உளைச்சலில் இருப்பார். 200 கோடி கொடுத்தால் விஜய்யை எதிர்த்து போட்டியிடுவேன்.’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.