இஸ்ரேல் – ஈரான் போர்: "கத்தாரில் நான் சென்றதுதான் கடைசி விமானம்" – சந்தோஷ் நாராயணன் பதிவு

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்
இஸ்ரேல் – ஈரான் தாக்குதல்

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரும் ஈரானிய தாக்குதலால் பாதிப்பு அடைந்திருக்கிறது.

இந்நிலையில், கத்தாரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால், அங்கிருந்து புறப்பட்ட கடைசி விமானத்தில் தப்பி அமெரிக்கா சென்றுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், “மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிலையங்கள் முழுமையாக மூடப்படுவதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு அங்கிருந்து புறப்பட்ட கடைசி கத்தார் விமானம் நான் பயணித்த விமானமாகத் தான் இருக்கும்.

சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன்

அங்குள்ள (கத்தார்) எனது சகோதர சகோதரிகளின் பாதுகாப்புக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நான் பாதுகாப்பாக அமெரிக்கா வந்து சேர்ந்துவிட்டேன். உங்களின் அக்கறையான மெசேஜ்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.