சென்னை: எழும்பூர் ரயில்நிலைய மேம்பாட்டு பணி காரணமாக சென்னை எழும்பூர் செல்லும் சில விரைவு ரெயில் பாதை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதாவது, ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் மற்றும் பாதை மேம்பாட்டு பணிகள் காரணமாக ரயில்கள் மாற்றுப்பாதைகளில் பயண நேரத்தில் சிறிய தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என தெற்கு ரெயில்வே பயணிகளுக்கு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சில விரைவு மற்றும் சிறப்பு ரெயில்களின் சேவையில் தற்காலிக […]