'அதிர்ச்சி சரிவு' 92 டாலர்களை தாண்டிய இந்திய ரூபாய் – அடுத்தடுத்த தாக்கம் என்ன?

வரலாற்றில் முதல்முறையாக இந்திய ரூபாயின் மதிப்பு 92 டாலர்களைத் தாண்டி வர்த்தகமாகி வருகிறது.

இதற்கான காரணம் நாம் அனைவரும் அறிந்ததே – ஒன்று, உலக அளவில் நிலவும் நிலையற்ற தன்மை. இன்னொன்று, வளைகுடா நாடுகளில் பரவியுள்ள பதற்றத்தால் கச்சா எண்ணெய் மேலும் மேலும் எகிறும் என்கிற அச்சம்.

இந்த இரண்டினால் பயப்படும் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை வேகமாக விற்று வருகின்றனர். இதனால், பங்குச்சந்தையும் சரி… இந்திய ரூபாயின் மதிப்பும் சரி… வேகமாக வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

இன்னொரு பக்கம், அமெரிக்காவின் டாலர் வலுவடைந்து வருகிறது. இதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை இந்தியாவில் இருந்து மாற்றி வருகின்றனர்.

ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

ஏன் கச்சா எண்ணெய் விலை இந்தியாவிற்கு மைனஸ்?

உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம்.

இப்போது கச்சா எண்ணெய் விலை உயர்வது நிச்சயம் இந்தியாவை சற்று அசைத்துப் பார்க்கும் தான்.

ஹார்மோஸ் ஜலசந்தி தற்போது மூடப்பட்டிருப்பதால், இந்தியா ரஷ்யா போன்ற நாடுகளை கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தேட வேண்டும்.

ஆனால், இந்தியாவிடம் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை, ஒரு மாதத்தைத் தாண்டியும் போர் நீடித்தால், இந்தியாவிற்கு இது இன்னும் பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.

இந்தச் சூழல் பாதிக்கும் முக்கிய விஷயங்களில் இந்திய ரூபாய் மதிப்பும் ஒன்று.

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்தால் என்ன ஆகும்?

இங்கே பணவீக்கம் அதிகரிக்கும். அடுத்ததாக, வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும்.

இது இரண்டும் நடந்தால் சாமானிய மக்களின் வாழ்க்கைக் கூட பாதிக்கும்.

அடுத்ததாக, அமெரிக்க டாலர்களில் கடன் வாங்கி இருக்கும் இந்திய நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும்.

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

ஏற்கெனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும்பாலும் இந்திய முதலீடுகளை விற்றுகொண்டு வருகின்றனர். இந்திய ரூபாய் மதிப்பு குறைந்தால், அவர்கள் மேலும் தங்களது முதலீடுகளை வெளியேற்றுவார்கள்.

இதில் இருக்கும் பாசிட்டிவான விஷயம் என்னவென்றால், ஐ.டி, ஜவுளி போன்ற துறைகள் ஏற்றுமதியில் பலனடையும்.

இந்திய ரூபாயின் மதிப்பு எப்போது சரியாகலாம்?

இந்தப் போர் முடிந்து, இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வருவதில் பிரச்னை இல்லை என்கிற சூழல் உருவாகும் போதும்… இந்தியாவில் பணவீக்கம் இல்லை என்கிற நிலை உருவாகும் போதும்.

மேலும், இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாய் வீழ்ச்சியை சரிசெய்ய தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.