"தனிப்பட்ட முறையில் ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம், ஆனால்.!"- மாணிக்கம் தாகூர் சூசகம்

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸில் சிலர் பேசி வந்தனர். மேலும், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசினார்.

மாணிக்கம் தாகூரும் அதிரடி பதிவுகளை பதிவிட்டு வந்தார். இதனால் காங்கிரஸ் – தவெக-வுடன் கூட்டணி வைக்குமோ? என்ற சந்தேகங்கள் எழுந்தன.

இப்படி திமுக – காங்கிரஸ் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவிக்கொண்டே இருந்த நிலையில் சென்னை வந்த காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், “திமுக-வுடன் சேர்ந்து வகுப்புவாதச் சக்திகளை எதிர்ப்போம். திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது.

ராகுல் காந்தி, ஸ்டாலின்
ராகுல் காந்தி, ஸ்டாலின்

கூட்டணி தொடர்பான தனிநபர் கருத்து, காங்கிரஸ் கட்சியின் கருத்து கிடையாது. கட்சியின் அறிவுறுத்தலை மீறிப் பேசினால் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கும்” என்று திமுக – காங்கிரஸ் பஞ்சாயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

இது ஒருபுறம் இருக்க, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஓரங்கட்டிய காங்கிரஸ் தலைமை, 30 சட்டசபை தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஆனால், 27 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா இடங்கள் மட்டுமே தர முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், திமுகவுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தையை காங்கிரஸ் இன்று மேற்கொள்கிறது.

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி தலைமை எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்போம் என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” தனிப்பட்ட முறையில் ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். ஆனால் தனிநபர்களை விட கட்சி பெரியது.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

தலைமை முடிவு செய்யும் போது அதனை ஏற்றுக்கொள்வோம். ஏனெனில் ஒற்றுமையே நமது மிகப்பெரிய சக்தி” என்று பதிவிட்டிருக்கிறார். இன்று திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிடும் என்பதை தான் சூசகமாக பதிவிட்டிருக்கிறார் என்று பேசப்படுகிறது.

Loading…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.