சென்னை: நாளை சனிப்பெயர்ச்சி நிகழ்வதையொட்டி, தெற்கு ரயில் நாளை, நாளை மறுதினம் (மார்ச் 6 மற்றும் 7ந்தேதி) சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் வெளியிட்ட அறிக்கையில், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா மார்ச் 6இல் (நாளை) நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்டநெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை வெள்ளி, சனிக்கிழமைகளில் தெற்கு ரயில்வே இயக்குகிறது. […]