IRIS Dena: '2-ம் உலகப்போருக்கு பின் முதன்முறை' இந்தியா வந்து திரும்பிய ஈரான் கப்பலை அழித்த அமெரிக்கா

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் வளைகுடா நாடுகளைத் தாண்டி இலங்கைக்கு அருகே வரை வந்துள்ளது.

என்ன நடந்தது?

“நேற்று (மார்ச் 4) இலங்கையின் தெற்குக் கடற்கரை பகுதியில் இருந்துள்ளது ஈரானிய கடற்படை போர்க்கப்பலான IRIS தேனா. இந்தக் கப்பலை அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் நீருக்கடியில் தாக்கும் ஏவுகணையான டார்பிடோவை ஏவி மூழ்கடித்துள்ளது.”

இந்தக் கப்பலில் எத்தனை பேர் இருந்தனர்?

IRIS தேனா போர்க்கப்பலில் கிட்டத்தட்ட 180 பேர் இருந்துள்ளனர். இப்போது வரை கிடைத்துள்ள தகவலின் படி, 87 பேரின் உடலை இலங்கைக் கடற்படை மீட்டுள்ளனர்.

32 பேர் இலங்கையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

IRIS Dena
IRIS Dena

ஈரான் போர்க்கப்பல் இலங்கை கடற்பகுதிக்கு எப்படி வந்தது?

“கடந்த மாதம், இந்தியா விசாகப்பட்டினத்தில், ‘MILAN 2026’ என்கிற மிகப்பெரிய கப்பற்படைப் பயிற்சி ஒன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட பல நாடுகளில் ஈரானும் ஒன்று.

ஈரான் சார்பாகக் கலந்துகொண்ட போர்க்கப்பல் தான் IRIS தேனா.”

இலங்கையில் இந்தத் தாக்குதலா?

“IRIS தேனா போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது இலங்கை கடற்பகுதிக்கு அருகே தானே தவிர, இலங்கைக் கடற்பகுதியில் இல்லை. அமெரிக்கா இந்தக் கப்பலை இலங்கை அருகே இருக்கும் சர்வதேசக் கடற்பகுதியில் தான் தாக்கியிருக்கிறது.

ஆனால், மீட்புப்பணிகளை இலங்கை கடற்படை பார்த்து வருகிறது.

இந்தக் கப்பல் தாக்குதல் குறித்த அமெரிக்கா சொல்வதென்ன?

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் தலைமையகம் ‘பென்டகன்’.

ஈரானின் போர்க்கப்பலை மூழ்கடித்துள்ளதைக் குறித்து பென்டகன் கூறியுள்ளதாவது… ‘இரண்டாம் உலகப் போருக்குப் பின், எதிரி மீது இந்த மாதிரியான தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை’.

ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி
ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி

ஈரானின் பதிலடி என்ன?

“ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி, “ஈரான் கடற்கரையிலிருந்து 2,000 மைல்கள் தொலைவில் உள்ள கடலில் அமெரிக்கா அட்டூழியத்தைச் செய்துள்ளது.

கிட்டத்தட்ட 130 மாலுமிகளை ஏற்றிச் சென்ற இந்திய கடற்படையின் விருந்தினரான ஃபிரிகேட் தேனா, சர்வதேச நீரில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தாக்கப்பட்டது.

எனது வார்த்தைகளைக் கவனியுங்கள் – அமெரிக்கா தான் அமைத்த முன்னுதாரணத்திற்காகக் கடுமையாக வருத்தப்பட வேண்டியிருக்கும்”.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.