கோவை: கை, கால்கள் கட்டிப் போட்டு மூதாட்டி கொலை… நகைகள் திருட்டு; நேபாள பணிப்பெண்ணுக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம், திருச்சி சாலை நஞ்சுண்டாபுரம் பகுதியில் பார்சன் குடியிருப்பு உள்ளது. அங்கு கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட ராம்குமார் குட்டி என்கிற ஆயுர்வேத மருத்துவர், தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ராம்குமாரின் அம்மா கஸ்தூரி குட்டி (82) அவர்களுடன் வசித்து வந்தார்.

கொலை நடந்த வீடு

ராம்குமார் குடும்பத்தினருடன் வியட்நாம் சென்றுள்ளார். கஸ்தூரி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களாக நேபாளத்தைச் சேர்ந்த சுர்ஜா என்பவர் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்து வந்துள்ளார். 

ராம்குமார் இன்று கஸ்தூரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். கஸ்தூரி தொலைபேசியை எடுக்கவில்லை. இதனால் பதறிப்போன ராம்குமார் அருகில் இருப்பவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி கஸ்தூரி சடலமாக இருந்தது தெரியவந்திருக்கிறது.

சடலம்
சடலம்

இதையடுத்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், கஸ்தூரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கின்றனர்.

காவல்துறை விசாரணையில் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. கை ரேகைகளைச் சேகரித்து, மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டின் பின்னால் தூக்கி வீசப்பட்டிருந்த கஸ்தூரியின் செல்போன் மீட்கப்பட்டது.

சுர்ஜா

நேபாளத்தைச் சேர்ந்த பணிப்பெண் சுர்ஜா தான் மூதாட்டியைக் கொலைசெய்து நகையைத் திருடியதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.