சென்னை : சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்” நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் அடுத்த 5 ஆண்டு வளர்ச்சிக்கான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கிறார். மேலும் துறை வாரியாக அரசின் சாதனைகளை அமைச்சர்கள் எடுத்துரைக்கின்றனர். தொடர்ந்து, உங்க கனவ சொல்லுங்க புதுமையான திட்டம் குறித்து சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 6.3.2026 அன்று காலையில் பொதுமக்கள், பத்திரிகை, ஊடக வல்லுநர்கள் சான்றோர்கள் கருத்துகள் மீது கலந்துரையாடல்கள் நடைபெறுகிறது. […]