சென்னை: தமிழகத்தில் மேலும் 1,000 குளிா்சாதன வசதி கொண்ட தாழ்தள சொகுசு மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் கோரியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் ஏற்கனவே குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மின்சார பேருந்துகளும், இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, சென்னையில் குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள் உள்பட 625 தாழ்தள வசதி கொண்ட மின்சார பேருந்துகளை மாநகா் போக்குவரத்துக்கழகம் கொள்முதல் செய்துள்ளது. இந்தப் பேருந்துகள் […]