புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஐடி இன்டர்ன்ஷிப்புக்கு ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் 22 நிறுவனங்களுடன் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான புதுவை அரசு ஒப்பந்தம் கையெழுத்தானது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில், உள்ளூர் பட்டதாரிகளுக்குத் முன்னணி ஐ.டி மற்றும் ஐ.டி.இ.எஸ் நிறுவனங்களில் ஒரு வருட இன்டர்ன்ஷிப் வாய்ப்பை வழங்க 22 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மார்ச 6ந்தேதி கையெழுத்தாயின. இத்திட்டத்திற்காக ரூ.1.8 கோடியை ஒதுக்கியுள்ள புதுச்சேரி அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட 147 மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 […]