கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 47 பா. தேவிமயில் குமார் மகளிர் தினம்….. (சற்று யோசிப்போம்) எளிதாக இந்த தினத்தை கடந்து விட இயலவில்லை!! சதி… சாதியெனும் சக்கர வியூகங்களில் சிக்கிய முன் வரிசை வீரர்கள் நாங்களே!!! நிலமும், வீடும் நகையும், பணமும் அதோடு… கூட நாங்களும் ஒன்றுதான் உங்கள் கணக்கீட்டில்! பேறுகால வலியைக் காட்டிலும், அனுதினமும் போர்க் கால வலிகள் எங்களுக்கு பழகிய ஒன்றாகி போனது!!! உலகமெலாம் பொதுவானதொரு பணயப்பொருளானோம்… அன்று முதல்… […]