சமையல் சூப்பர் ஸ்டார்: திரண்டு வந்த ஈரோடு போட்டியாளர்கள் அணிவகுத்த அறுசுவை உணவுகள்!

சமையல் திறனை வெளிப்படுத்துவதற்கான அற்புதமான மேடை அமைத்து கொடுத்திருக்கிறது அவள் விகடன். சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-3 நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் ,புதுச்சேரி வேலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலியைத் தொடர்ந்து இன்று (மார்ச் 8 ஞாயிற்றுக்கிழமை) ஈரோட்டில் நடைபெற்று வருகிறது.

ஈரோடு சமையல் சூப்பர் ஸ்டார்

ஈரோடு திண்டல் அருகே உள்ள வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. போட்டியின் நடுவரான, சோஷியல் மீடியா பிரபலம் செஃப் தீனா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மகளிர் தினத்தை முன்னிட்டு போட்டியாளர்கள் சிலர் சிறப்பு விருந்தினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் பேசிய செஃப் தீனா, மற்ற இடங்களைவிட ஈரோட்டில் அதிக போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர் என மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு ,சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம்,மூலபாளையம், விஜயமங்கலம், பெருந்துறை, நசியனூர், வெள்ளோடு , சம்பத்நகர்,மேட்டுக்கடை என பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு சமையல் சூப்பர் ஸ்டார்

முதல் சுற்றில் போட்டியாளர்கள் தாங்கள் சமைத்து கொண்டு வந்திருந்த உணவுகளைக் காட்சிப்படுத்தி வருகின்றனர். சிறு பருப்பு பாயசம், வத்தக்குழம்பு, பள்ளிப்பாளையம் சிக்கன், மங்கோலியன் சிக்கன், கோதுமை பாயசம், நாட்டுக்கோழி சுக்கா, நல்லாம்பட்டி சாதம், கருப்பு கவுனி அரிசி பணியாரம், கம்பு சாதம், மட்டன் சுக்கா,

கேரட் குலோப் ஜாமுன், திண்டல் ஸ்பெஷல் வாத்து கிரேவி, திணை லட்டு, கற்றாழை அல்வா, சிறுதானிய பொங்கல், பனங்கிழங்கு இடிச்ச மாவு, வரகு பிரியாணி என பல்வேறு வகையான உணவுகளை காட்சிப்படுத்தி உள்ளனர்.

ஈரோடு சமையல் சூப்பர் ஸ்டார்

செஃப் தீனா உணவுகளை ருசி பார்த்து, உணவுகளின் சிறப்புகளையும் பங்கேற்பாளர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, மதிப்பெண் வழங்கி வருகிறார். முதல் சுற்றில் தேர்வு செய்யப்படும் போட்டியாளர்கள், அடுத்த சுற்றான நேரடி சமையல் சுற்றில் பங்கேற்பார்கள். போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.