டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் மேற்கு ஆசிய போர் குறித்து விவாதிக்க மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் கார்கே கோரிய அனுமதியை ஏற்க மறுத்ததை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். இதில் கார்காவுடன் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர் பங்கேற்றனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜன. […]