ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.! | Automobile Tamilan

இந்தியாவில் ரெனால்ட் மிக தீவரமான முன்னெடுப்பினை துவங்கியுள்ள நிலையில், சமீபத்திய டீசரில் வெளியிடப்பட்ட Bridger எஸ்யூவி கான்செப்ட் அடிப்படையிலான மாடல் டஸ்ட்டரை விட சற்று சிறியதாகவும், கிகர் மாடலை விட பெரியதாகவும் விற்பனைக்கு ICE, ஹைபிரிட், எலக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி ஆகிய ஆப்ஷன்களில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி-யான ரெனால்ட் ‘மினி டஸ்ட்டர்’ (Renault Mini Duster) 2027-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி அறிமுகமாக உள்ளது.

குறிப்பாக வரவுள்ள மாடல் போட்டியாளர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் 1.2 லிட்டர் பெட்ரோல், டர்போ-பெட்ரோல், ஹைப்ரிட் , சிஎன்ஜி, மற்றும் எலக்ட்ரிக் என வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளுக்கும் ஏற்றவாறு பல ஆப்ஷன்களில் இது வெளியாகவுள்ளது. எலக்ட்ரிக் மாடலில் வரவுள்ள பிரிட்ஜர் 35kWh மற்றும் 55kWh என இரண்டு விதமான பேட்டரி தேர்வுகள் கொடுக்கப்படலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவுள்ள இந்த புதிய காருக்கு என பிரத்தியேகமான ரெனால்ட்டின் புதிய R-GMP பிளாட்ஃபார்மில், ‘பிரிட்ஜர்’ (Bridger) கான்செப்ட் டிசைனை அடிப்படையாகக் கொண்டு இது வடிவமைக்கப்பட உள்ளது.

பட்ஜெட்டிற்குள் ஒரு கச்சிதமான, அதேசமயம் நவீன வசதிகள் நிரம்பிய எஸ்யூவி-யை எதிர்பார்க்கும் எவருக்கும், இந்த ரெனால்ட் மினி டஸ்டர் நிச்சயம் ஒரு சிறப்பான தேர்வாக அமையும்! அதேவேளையில் , இந்தியச் சந்தையில் மாருதி, மஹிந்திரா, டாடா, ஹூண்டாய், கியா போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு மிகக் கடும் போட்டியை ஏற்படுத்தும்.

புதிய பிரிட்ஜர் கான்செப்ட்டின் அடிப்படையிலான மாடல் விற்பனைக்கு 2027ல் வரவுள்ள நிலையில் விலை ரூ.9 லட்சம் முதல் துவங்கலாம் என கூறப்படுகின்றது. மேலும் இந்த மாடலை பற்றிய பல்வேறு முக்கிய அதிகாரப்பூர்வ தகவலை மார்ச் 10ல் எதிர்பார்க்கலாம்.

Related Motor News

No Content Available

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.