சென்னை: 30 நாட்களுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களின் கனவுகளையும் கேட்டறிந்து ஆய்வு செய்து, தமிழ்நாட்டுக்கான ஒரு மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்கப் போகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், அத்திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும் அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக […]