சென்னை: பெருங்குடி மற்றும் எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்புகளில் ரூ.113.80 கோடியில் மேம்பாலம் அமைக்க, தனியார் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. ஓஎம்ஆர் சாலை பகுதியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வரும் மேம்பால மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் திட்ட அமலாக்கத்தில் தேவைப்படும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த மேம்பாலங்களை அமைக்கும் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை, வைப்புத்தொகை அடிப்படையில் மெட்ரோ நிறுவனத் திடம் ஒப்படைத்துள்ளது. அதன்படி, பெருங்குடி மற்றும் […]