`வரவு செலவுகளை ஆர்த்தி தான் பார்க்குறாங்க; அவங்க இல்லைன்னா.!'- மனைவி குறித்து சிவகார்த்திகேயன்

சிவகுமார் முருகேசன் இயக்கித்தில், ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘தாய் கிழவி’.

இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்க, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருந்தார். கடந்த மாதம் (பிப்.27) வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

தாய் கிழவி
தாய் கிழவி

இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நேற்று (மார்ச்.11) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் தன் மனைவி ஆர்த்தி குறித்து பேசியவை இணையத்தில் வைரலாகி இருக்கின்றன.

“எனக்கு திருமணம் ஆன நாளில் இருந்து என் மனைவி ஆர்த்திதான் வரவு செலவு கணக்குகளைப் பார்க்கிறார். என் அக்கவுன்ட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்றுகூட எனக்கு தெரியாது. ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால்கூட டிக்கெட்டிற்கு பணம் கொடு என்று ஆர்த்தியிடம்தான் கேட்பேன்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

ஆர்த்தி கொடுப்பதை சாந்தோஷமாகவும், பெருமையாகவும் வாங்கிக் கொள்கிறேன். அதை பெருமையாகவும் நினைக்கிறேன். அவர் பார்த்துக்கொள்ளவில்லை என்றால் என்னால் தயாரிப்பாளராக ஆகியிருக்க முடியாது. இந்தப் படத்தைப் பார்த்தப்போது ஆர்த்தி எனக்கு ஒரு பவுனுத்தாயாகத் தெரிந்தாள்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.