'கடைசி வரைக்கும் நன்றியோட இருந்தா மாஸ்'ன்னு சொல்லிருக்கீங்க, நான் என்னைக்குமே!'- தனுஷ் குறித்து கென்

கென் கருணாஸ் ‘அசுரன்’, ‘விடுதலை 2’, ‘வாத்தி’ போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார்.

இதனிடையே தனுஷின் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். தற்போது ‘யூத்’ படத்தை இயக்கி இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரி- ரிலீஸ் ஈவென்ட் இன்று ( மார்ச். 13) நடைபெற்றிருக்கிறது.

யூத் படத்தில்...
யூத் படத்தில்…

இதில் கலந்துகொண்டு பேசிய கென் கருணாஸ், ” நான் இன்னைக்கு இந்த மேடையில இயக்குநரா நிக்கிறதுக்கு தனுஷ் சார் தான் காரணம்.

தெரிஞ்சோ, தெரியாமலோ உங்கக்கிட்ட இருந்து நிறைய விஷயங்களைக் கத்திருக்கேன் சார்.

‘வாத்தி’ படத்தில முதல் இடத்தை பிடிக்கிற மாதிரி ஒரு சீன் நடிச்சிருந்தேன். அதைப் பார்த்து நீங்க ரசிக்கிற மாதிரி ஒரு ஷாட் இருக்கும். ஷாட் முடிச்சதுக்கு அப்புறம் ‘இந்த மாதிரி நீ விருது வாங்கிறதை ஒரு நாள் நான் பார்க்கணும். அன்னைக்கு எனக்கு இப்படி எமோஷனலா இருக்கும்னு’ நீங்க சொன்னீங்க.

நான் விருது வாங்குவனா’ன்னு தெரியாது. ஆனா இன்னைக்கு இந்த ஸ்டேஜில ஒரு இயக்குநராகி நிக்குறது ரொம்ப சந்தோஷமா இருக்குது சார்.

தனுஷ்
தனுஷ்

‘திருச்சிற்றம்பலம்’ ஆடியோ லான்ச்ல நீங்க சொல்லிருப்பீங்க,’ கடைசி வரைக்கும் நன்றியோட இருந்தா மாஸ்’ன்னு’ அந்தவகையில உங்களுக்கும், வெற்றிமாறன் சாருக்கும் கடைசி வரை ஒரு நல்ல சிஷியனாக இருப்பேன்” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.