மாதவிடாய் (Periods) காலத்தில் பெண்களுக்கு கட்டாயமாக விடுப்பு வழங்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால், அது பெண்களின் வேலை வாய்ப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த விசாரணையில், பெண்களுக்கு அனைத்து வேலை இடங்களிலும் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்தது. அதே நேரத்தில், மனுதாரர் அளித்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து, […]