இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒருவரை க்ரீமி லேயர் (Creamy Layer) அல்லது நான்-க்ரீமி லேயர் என தீர்மானிக்கும்போது, அவர்களின் குடும்ப வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை (மார்ச் 11, 2026) வழங்கப்பட்ட இந்த முக்கிய தீர்ப்பில், க்ரீமி லேயர் நிர்ணயத்தில் முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. பெற்றோரின் சம்பளம் அல்லது வருமானம் மட்டுமல்லாமல், அவர்கள் வகிக்கும் பதவி நிலை மற்றும் பிற காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று […]